மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் மாடல் அறிமுகம்!
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் மேட் பினிஷ் செய்யப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்தியா பைக் வீக் திருவிழாவில் மேட் பினிஷ் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
கருப்பு நிறத்தில் சில கிராபிக்ஸ் ஸ்டிக்கர் வேலைப்பாடுகளுடன் பார்க்க கவர்ச்சியாக தெரிந்தது. இந்த பைக்கை தற்போது அப்பாச்சி ஆர்டிஆர் 180 மேட் பிளாக் எடிசன் என்ற பெயரில் தற்போது டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 177.4சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் 17 பிஎச்பி சக்தியையும், 15.5 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.
தற்போது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் அதிக சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் அப்பாச்சி ஆர்டிஆர் 180. இந்த ஆண்டு இறுதியில் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கிற்கு மாற்றாக புதிய அப்பாச்சி மாடலை டிவிஎஸ் அறிமுகப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








