2015 டக்கார் ராலி பந்தயத்தில் களமிறங்கும் டிவிஎஸ் ரேஸிங்!
2015ம் ஆண்டு டக்கார் ராலி ரேஸ் பந்தயத்தில் டிவிஎஸ் ரேஸிங் அணி களமிறங்க உள்ளது.
டக்கார் ராலி ரேஸில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நட்டை சேர்ந்த ஷெர்கோ நிறுவனத்துடன் டிவிஎஸ் ரேஸிங் கைகோர்த்துள்ளது.

டக்கார் ராலி பந்தயத்துக்கான மோட்டார்சைக்கிள்களை ஷெர்கோ நிறுவனம் வடிவமைத்து, தயாரித்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு, பிரத்யேக ஹெட்லைட்டுகள், ரேடியேட்டர் பாதுகாப்பு, ஜிபிஎஸ் சிஸ்டம் மற்றும் எரிபொருள் டேங்க் போன்றவற்றை இரு நிறுவனங்களும் சேர்ந்த தயாரிக்க உள்ளன. மேலும், பஞ்சர் ப்ரூஃப் ட்யூப் மற்றும் டயர்களையும் வடிவமைக்க உள்ளன.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேபியன் பிளாநெட் மற்றும் அலையன் டல்கோஸ் ஆகியோர் வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். டக்கார் ராலி ரேஸிலும், என்டியூரோ வகை மோட்டார்சைக்கிள் ஓட்டுவதில் இருவரும் நல்ல அனுபவம் பெற்றவர்கள்.


Click it and Unblock the Notifications








