வரும் 20ந் தேதி விற்பனைக்கு வருகிறது டிவிஎஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டர்!
ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பெரிய பங்களிப்பையும், தனி அடையாளத்தையும் ஏற்படுத்தித் தந்த மாடல் ஸ்கூட்டி. பெண்களுக்கு சிறந்த ஸ்கூட்டர் மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், ஸ்கூட்டிக்கு மாற்றாக புதிய தலைமுறை மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பல புதிய மாடல்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது. அதில், ஸெஸ்ட் என்ற பெயரிலான புதிய ஸ்கூட்டர் மாடல்தான் தற்போது ஸ்கூட்டி இடத்தை நிரப்ப வருகிறது. வரும் 20ந் தேதி புதிய டிவிஎஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது.

அம்சங்கள்
டிவிஎஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டரில் எல்இடி விளக்குகள், கவர்ச்சியான ஹெட்லைட் டிசைன் போன்றவற்றுடன் பேக்லிட் டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் வருகிறது.

எஞ்சின்
இந்த புதிய ஸ்கூட்டரில் 8 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 109.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். சிவிடி- ஐ டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

மைலேஜ்
இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

ஸ்டோரேஜ் வசதி
இருக்கைக்கு கீழே 19 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி இருக்கிறது. இதன் செக்மென்ட்டில் மிகச்சிறந்த இடவசதி கொண்ட மாடலாகவும் இருக்கும். கால் வைப்பதற்கான ஃபுட் போர்டும் வசதியாக இருக்கும்.

விலை
ரூ.45,000 விலையில் இந்த புதிய டிவிஎஸ் ஸெஸ்ட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








