மே ரிலீஸ்: பிரிமியம் அம்சங்களுன் வரும் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்!
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் மாடல் ஸ்டார் சிட்டி. ஊரக மார்க்கெட்டில் அதிகம் விரும்பப்படும் மாடலாக திகழும் ஸ்டார் சிட்டியின் மார்க்கெட்டை தக்க வைக்கும் விதமாக ஸ்டார் சிட்டி ப்ளஸ் என்ற புதிய மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் விற்பனைக்கு வருகிறது. ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில் இந்த புதிய பைக்கின் உற்பத்தி துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, வட மாநிலங்களில் முதலில் இந்த புதிய ஸ்டார் சிட்டி பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஜூன் மாதம் முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
சிறிய அளவிலான காஸ்மெட்டிக் மாற்றங்களுடன், கூடுதல் வசதி கொண்டதாக வருகிறது. புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், வடிவமைப்பில் மாறுதல் செய்யப்பட்ட ஹெட்லைட், வசதியான புதிய இருக்கை, டியூவல் டோன் மட்கார்டு, புதிய டிசைன் கொண்ட எக்சாஸ்ட் பைப் ஆகிய மாற்றங்களை கண்டிருக்கிறது.
5 ஸ்டெப் அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் இருக்கும். மேலும், 8.3 எச்பி ஆற்றலை வழங்கும் 110சிசி ஈக்கோத்ரஸ்ட் டிஎல்ஐ எஞ்சின்தான் புதிய மாடலில் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், எஞ்சின் மேம்படுத்தப்பட்டிருப்பதால், அதிக மைலேஜை தரும் என்கிறது டிவிஎஸ். ஆனால், பவர் மற்றும் டார்க்கில் மாற்றங்கள் இல்லை.
எலக்ட்ரிக் ஸ்டார்ட், சர்வீஸ் ரிமைன்டர், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் ஆகியவை புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் இடம்பெற்றிருக்கும் கவர்ச்சிகரமான அம்சங்களாக கூறலாம்.


Click it and Unblock the Notifications








