அடுத்து இந்தியா வரும் புதிய அமெரிக்கன் பிராண்டு மோட்டார்சைக்கிள்கள்!
அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விரைவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யுஎம் மோட்டார்சைக்கிள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போதே, இந்திய பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து, இந்தியாவில் கால் பதிக்க யுஎம் நிறுவனம் முடிவு செய்தது. மேலும், இந்தியாவில் கூட்டணி அமைத்து களமிறங்கவும் திட்டமிட்டது. இந்த நிலையில், லோஹியா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய இருப்பதாக யுஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் உள்ள லோஹியா ஆட்டோ நிறுவனத்தின் இருசக்கர வாகன ஆலையில் தனது மோட்டார்சைக்கிள்களை யுஎம் அசெம்பிள் செய்ய உள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு ரூ.1,00,000 மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க முடியும்.
50:50 என்ற பங்களிப்புடன் யுஎம்- லோஹியா இடையிலான கூட்டணி அமைகிறது. ஸ்போர்ட்ஸ், டூரிங் ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்ய யுஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








