அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியா வரும் யுஎம் மோட்டார்சைக்கிள்கள்!

By Saravana

அடுத்த ஆண்டு மத்தியில் அமெரிக்காவை சேர்ந்த யுஎம் நிறுவனத்தின் பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யுஎம் நிறுவனம் தனது சில பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள்களை காட்சிக்கு வைத்திருந்து. இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

UM Motorcycles

இந்தநிலையில், இந்தியாவில் கூட்டணி அமைத்து தனது மோட்டார்சைக்கிள்களை மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது யுஎம். லோஹியா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் 50:50 என்ற பங்களிப்பில் யுஎம் மற்றும் லோஹியா நிறுவனங்கள் இணைந்து இந்த பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய உள்ளன.

கடந்த செப்டம்பர் யுஎம்எல் என்று பெயரில் துவங்கப்பட்ட இந்த புதிய கூட்டணி நிறுவனம் டீலர்ஷிப்புகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. முதல் ஆண்டில் நாடு முழுவதும் 50 டீலர்ஷிப்புகளை துவங்குவதற்கு திட்டமிட்டுளளனர்.

இந்த புதிய டீலர்ஷிப்புகள் வழியாக யுஎம் பிராண்டின் 300சிசி முதல் 500சிசி வரையிலான பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளனர். மேலும், இதற்காக ரூ.120 கோடியை முதலீடு செய்யவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், காஷிபூரில் உள்ள லோஹியா ஆட்டோவின் வாகன உற்பத்தி ஆலையில் இந்த மோட்டார்சைக்கிள்கள் அசெம்பிள் செய்யப்படும். ஆண்டுக்கு 1,00,00 லட்சம் மோட்டார்சைக்கிள்களை இந் ஆலையில் உற்பத்தி செய்ய முடியும்.

டிஎஸ்கே பெனெல்லி கூட்டணிக்கு நேர் போட்டியாக இந்த புதிய கூட்டணியின் வர்த்தகம் அமையும். ஆனால், இந்தியாவில் எந்தெந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2014, 16:04 [IST]
English summary
At the recent 2014 Auto Expo, which was held in Delhi, India UM motorcycles had showcased a few of their products. Their bikes garnered loads of attention and the American manufacturer had promised to launch their bikes in India soon, back then
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+