24 மணிநேர சாலை அவசர உதவி திட்டத்தை அறிமுகப்படுத்திய வெஸ்பா
நடுவழியில் அவசர உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக இலவச சாலை அவசர உதவி திட்டத்தை வெஸ்பா ஸ்கூட்டர் நிறுவனம் துவங்கியுள்ளது.
நாட்டிலுள்ள 51 நகரங்களில் இந்த சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வெஸ்பா கேர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவழியில் பஞ்சர் ஆவது, சாவி காணாமல் போவது, எரிபொருள் தீர்ந்து போவது உள்ளிட்ட பிரச்னைகளால் தவிக்கும் வாடிக்கையாளர்கள் வெஸ்பா கேர் மையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடி உதவி கிடைக்கும். மேலும், முதலுதவி மருத்துவ சிகிச்சையையும் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
ஒருவேளை, வாடிக்கையாளர் ஸ்கூட்டரை விற்பனை செய்தால் கூட, அடுத்த உரிமையாளருக்கு இந்த திட்டத்தை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த சேவைக்காக பயிற்சி பெற்ற பணியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக வெஸ்பா ஸ்கூட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








