விக்டரி பிராண்டில் அடுத்த மெகா சைஸ் மோட்டார்சைக்கிளை வெளியிட்ட போலரிஸ்!

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் மற்றும் விக்டரி மோட்டார்சைக்கிள் ஆகிய இரு நிறுவனங்களும் போலரிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்றன. இந்தியன் பிராண்டில் மேம்படுத்தப்பட்ட ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகமான அதேவேளையில், விக்டரி பிராண்டிலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மேக்னம் மோட்டார்சைக்கிள் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்ற அளவில்தான் இதன் டிசைனும், சிறப்பம்சங்களும் இருக்கின்றன. நீண்ட தூர பயணங்களுக்கான பிரத்யேக மாடலாக டிசைன் செய்யப்பட்ட விக்டரி மேக்னம் இந்திய மதிப்பில் ரூ.13.26 லட்சம் விலையில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


 கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சிறப்பம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்களை காணலாம்.

 பேக்கர்

பேக்கர்

இந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிளை பேக்கர்(Bagger) என்று அழைக்கின்றனர். அதாவது, பொருட்களை பைகள் மூலமாக எடுத்துச் செல்வதால் இந்த பெயர் தொற்றிக் கொண்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் 1,731சிசி வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எலக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சின் அதிகபட்சமாக 143.7 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

எடை

எடை

எரிபொருள் நிரப்ப நிலையில், இந்த மோட்டார்சைக்கிள் 345 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 21 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

இந்த புதிய 2015 மேக்னம் மோட்டார்சைக்கிளில் 100 வாட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. அதில், உங்களது விருப்பமான பாடல்களை வரிசைப்படுத்திக் கேட்பது உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளதால் இனிய பயணத்தை வழங்கும்.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் சிவப்பு, சாம்பல், இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் சில்வர் வண்ணக் கலவை ஆகிய 4 வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

 இந்தியா வர வாய்ப்பு

இந்தியா வர வாய்ப்பு

இந்தியாவில் விக்டரி மோட்டார்சைக்கிள் மாடல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. இந்தியாவில் இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டுவிட்டதால், விரைவில் விக்டரி பிராண்டையும் களமிறக்குவது குறித்து போலரிஸ் நிச்சயம் பரிசீலிக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 31, 2014, 16:55 [IST]
English summary
Victory Motorcycles has just revealed their offering for 2015 in the form of its Magnum. The new model is available at a price of INR 13,26,649 in America. The cruiser is highly customisable and will be popular among individuals who love to travel long distances.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+