உலக மோட்டார்சைக்கிள் தினம்... சேர்ந்தே கொண்டாடுவோம்...!
உலக மோட்டார்சைக்கிள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் பாராமல் இன்று அனைத்து தரப்பினரின் அத்தியாவசியமான போக்குவரத்து சாதனமாக மோட்டார்சைக்கிள்கள் பயன்படுகின்றன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களாகட்டும், கரடு முரடான சாலைகள் கொண்ட கிராமங்களாகட்டும் பிற வாகனங்களைவிட மோட்டார்சைக்கிளின் போக்குவரத்து பயன்பாடு மிக சிறப்பானதாக இருக்கிறது.

ஓர் இடத்திலிருந்து மிக விரைவாக எட்டுவதற்கும் மோட்டார்சைக்கிள்கள் சிறந்ததாக இருக்கின்றன. எரிபொருள் சிக்கனம், பட்ஜெட் விலை போன்ற காரணங்களால் மோட்டார்சைக்கிள்கள் ஒவ்வொரு வீட்டின் அத்தியாவசிய சாதனமாகிவிட்டது.
இந்த மோட்டார்சைக்கிளின் உன்னத பயன்பாட்டை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21ந் தேதி உலக மோட்டார்சைக்கிள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று மோட்டார்சைக்கிளில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு சுற்று சுற்றி வர மறவாதீர்.
அட, நமக்கு எல்லா நாளும் மோட்டார்சைக்கிள் தினம்தான் என்கிறீர்களா?! அதுவும் சரிதான்.


Click it and Unblock the Notifications








