ஆக்டிவாவின் தூக்கத்தை கெடுத்த யமஹா ஆல்ஃபா!!

By Saravana

கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது. விற்பனைக்கு வந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், இதுவரை 14,000 யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. பெங்களூரில் மட்டும் 3,500 யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

இது ஆக்டிவாவின் மார்க்கெட்டை பதம் பார்த்துவிடுமோ என்று கூறும் அளவுக்கான விற்பனை என்பதால், ஹோண்டா நிறுவனம் கிலியில் இருக்கிறது. ஏனெனில், மாதத்திற்கு 20,000 ஆல்ஃபா ஸ்கூட்டர்களை நிச்சயம் விற்போம் என்று யமஹா கூறியிருப்பதும், அந்த நிறுவனத்தின் தூக்கத்தை சில நாட்கள் கெடுத்துவிடும்.

வாடிக்கையாளர்களிடம் பேராதரவை பெற்றிருக்கும் யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டரின் சில முக்கிய சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

7.1 பிஎஸ் பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் அளிக்கும் 113சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

எடை

எடை

எடை 104 கிலோ எடை கொண்டது என்பதால் இருபாலருக்கும் எளிதாக கையாளும் விதத்தில் இருக்கும்.

கிரவுன்ட் கிளியரன்ஸ்

கிரவுன்ட் கிளியரன்ஸ்

130மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ரே ஸ்கூட்டர் மாடல்கள் போன்று இல்லாமல், ஹெட்லைட் ஹேண்டில்பாருடன் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

மெஜந்தா, சிவப்பு, சாம்பல், கருப்பு, வெள்ளை ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

ரூ.49,518 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2014, 16:22 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+