பெங்களூரில் மட்டும் யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டருக்கு 3,000 பேர் முன்பதிவு!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் யமஹாவின் புத்தம் புதிய ஆல்ஃபா ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய ரே ஸ்கூட்டர் மாடலைவிட இது வேறுபட்ட டிசைன் கொண்டதாக யமஹா அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாதத்தில் பெங்களூரில் மட்டும் 3,000 முன்பதிவுகளை யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர் பெற்றுள்ளது. மேலும், 10 நாட்களில் 500 ஸ்கூட்டர்கள் பெங்களூர் டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதனை கொண்டாடும் விதமாக பெங்களூர், ஓரியன் மாலில் சிறப்பு நிகழ்ச்சிக்கு யமஹா ஏற்பாடு செய்திருந்து. நிகழ்ச்சியின்போது ஓரியன் மால் வளாகத்தில் ஏராளமான ஆல்ஃபா ஸ்கூட்டர்களை யமஹா பார்வைக்கு நிறுத்தியிருந்தது. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

கிங்பிஷர் காலண்டர் அழகி
இந்த நிகழ்ச்சியில், 2014 கிங்பிஷர் காலண்டரின் அழகிகளில் ஒருவரான ஷோபிதா துலிபாலா மற்றும் யமஹாவின் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் ராய் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெலிவிரி
விழாவில் 10 வாடிக்கையாளர்களுக்கு யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர் டெலிவிரி கொடுக்கப்பட்டது.

பரிசுப் போட்டி
இந்த நிகழ்ச்சியின்போது ஆல்ஃபா ஸ்கூட்டர் உள்பட பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கொண்ட சிறப்பு பரிசுப்போட்டியும் நடந்தது.

டெஸ்ட் டிரைவ்
யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

காமெடி ஷோ
பிரபல காமெடி கலைஞர்கள் ரிச்சர்ட் லூயிஸ் மற்றும் கிர்லோஸ்கர் சத்யாவின் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.


Click it and Unblock the Notifications








