சென்னை யமஹா ஆலையில் முதலாவதாக ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி!
சென்னையில் அமைக்கப்பட்டு வரும் யமஹா நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகன ஆலையில் முதலாவது மாடலாக ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா இந்தியாவில் மூன்றாவது இருசக்கர வாகன ஆலையை அமைத்து வருகிறது. இந்த புதிய ஆலை சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது.

வரும் நவம்பர் மாதம் முதல் இந்த புதிய ஆலையில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த புதிய யமஹா ஆலையில் முதலாவதாக, ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
சூரஜ்பூரில் உள்ள ஆலையில் ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தென் இந்திய மார்க்கெட்டுக்கு ஏதுவாக சென்னை ஆலையிலும் ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.
மேலும், சூரஜ்பூரில் உள்ள ஆலையை போன்றே சென்னை ஆலையிலும் ஆல்ஃபா ஸ்கூட்டர் உற்பத்திப் பிரிவில் பெண் பணியாளர்களை நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னை ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்ட பின்னர் யமஹா நிறுவனத்தின் மொத்த உற்பத்தி ஆண்டுக்கு 3 மில்லியன் என்ற அளவில் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








