யமஹாவின் புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்!
ரூ.49,518 விலையில் இருபாலருக்குமான புதிய ஸ்கூட்டரை யமஹா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆல்ஃபா என்ற பெயரில் இந்த புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரே ஸ்கூட்டருக்கு அடுத்ததாக யமஹா நிறுவனத்திடமிருந்து வந்த 2வது ஸ்கூட்டர் மாடலாகும். ஆக்டிவா, சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர்களுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும்.

எஞ்சின்
7.1 பிஎஸ் பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் அளிக்கும் 113சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

எடை
எடை 104 கிலோ எடை கொண்டது என்பதால் இருபாலருக்கும் எளிதாக கையாளும் விதத்தில் இருக்கும்.

கிரவுன்ட் கிளியரன்ஸ்
130மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

மைலேஜ்
லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைட்
ரே ஸ்கூட்டர் மாடல்கள் போன்று இல்லாமல், ஆக்டிவாவில் இருப்பது போன்று ஹெட்லைட் ஹேண்டில்பாருடன் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
மெஜந்தா, சிவப்பு, சாம்பல், கருப்பு, வெள்ளை ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை
ரூ.49,518 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








