புதிய எலக்ட்ரிக் 3 வீலரின் காப்புரிமைக்கு விண்ணப்பித்த யமஹா!

By Saravana

இருசக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான யமஹா புதிய எலக்ட்ரிக் 3 வீலருக்கு காப்புரிமை வேண்டி பதிவு செய்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க காப்புரிமை அலுவலங்களில் புதிய எலக்ட்ரிக் 3 வீலர் ஸ்கூட்டருக்கு காப்புரிமை வேண்டி யமஹா விண்ணப்பித்துள்ளது.

யமஹாவின் இசி-03 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் இந்த புதிய எலக்ட்ரிக் 3 வீலர் ஸ்கூட்டர் மாடல் வடிவமைக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர் பின்புறத்தில் 2 வீல்கள் கொண்டதாகவும், அதில் தலா ஒரு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

New Yamaha Trike

வளைவுகளில் திரும்பும்போது சஸ்பென்ஷன் அமைப்பு தானாகவே அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதற்காக, கூடுதலாக ஒரு ஸ்விங்ஆர்ம் பின்புறத்தில் கொடுக்கப்பட்டிருப்பதாக டிசைன் வரைபடம் மூலம் தெரியவந்துள்ளது.

யமஹாவின் இசி-03 இருசக்கர எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அதே மின் மோட்டார்கள் இதிலும் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது. இந்த மின் மோட்டார்கள் 1.8 பிஎஸ் பவரையும், 9.6 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 6, 2014, 7:24 [IST]
English summary
The Japanese vehicle maker Yamaha has reportedly filed for a patent regarding a leaning electric three wheel scooter with the European and US patent office. This scooter could be based on the EC-03 electric scooter from Yamaha.
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+