நடிகர் ஜான் ஆபிரஹாமுக்கு ஸ்பெஷல் பைக்கை பரிசளித்த யமஹா!

By Saravana

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமுக்கு ஸ்பெஷல் எடிசன் எஃப்இசட்- எஸ் பைக்கை யமஹா நிறுவனம் பரிசளித்துள்ளது. தூம் படத்தில் சூப்பர்பைக்குகளில் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்த ஜான் ஆபிரஹாமை தனது நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமித்து பெருமை கொண்டது யமஹா.

இந்த நிலையில், சமீபத்தில் எஃப்இசட் மற்றும் எஃப்இசட்- எஸ் பைக்குகளின் வெர்ஷன் 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட மாடல்களை யமஹா அறிமுகம் செய்தது. இதில், எஃப்இசட்- எஸ் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் பைக் ஒன்றை பிரத்யேக அம்சங்களுடன் மாறுதல்களை செய்து ஜான் ஆபிரஹாமுக்கு பரிசளித்தது யமஹா.


பரிசளிப்பு நிகழ்ச்சி

பரிசளிப்பு நிகழ்ச்சி

யமஹாவின் Mission 10,000 என்ற எஃப்இசட் பைக் பயணத் துவக்க விழாவின்போது ஸ்பெஷல் எஃப்இசட் பைக்கை ஜான் ஆபிரஹாமிடம் வழங்கப்பட்டது.

 யமஹா அதிகாரிகள்

யமஹா அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில் யமஹா நிறுவனத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டு பைக்கை ஜான் ஆபிரஹாமிடம் வழங்கினர்.

அழகி பங்கேற்பு

அழகி பங்கேற்பு

2014 யமஹா மிஸ் ஃபேஸினோ அழகிப் போட்டியில் வென்ற கோயல் ராணாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

என்ன ஸ்பெஷல்?

என்ன ஸ்பெஷல்?

எஃப்இசட்- எஸ் பைக்கில் அதிக மாறுதல்கள் எதுவும் செய்யப்படவில்லை. மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருப்பதோடு, பெட்ரோல் டேங்க் பகுதியில் கண்ணாடியில் துப்பாக்கிக் குண்டு துளைத்து தெறிப்பு ஏற்பட்டது போன்ற டீகெல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதற்கு ஒத்துப்போகும் வகையில் ஹெல்மெட் மற்றும் ரைடிங் கியர் எனப்படும் பிரத்யேக உடைகள் கொடுக்கப்பட்டுள்ளன

விற்பனைக்கு வருமா?

விற்பனைக்கு வருமா?

பெட்ரோல் டேங்கில் ஜான் ஆபிரஹாம் கையெழுத்துடன் ஜான் ஆபிரஹாம் எடிசன் என்றே அழைக்கப்படும் இந்த பைக்கை மார்க்கெட்டில் யமஹா விற்பனைக்கு கொண்டு வருமா என்பது பற்றி தகவல் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, September 20, 2014, 10:59 [IST]
English summary
The Japanese manufacturer Yamaha has chosen a smart brand ambassador in the form of John Abraham. The Bollywood actor is known primarily for his role in Dhoom, he rode superbikes that caught everyone's fancy. Yamaha India have decided to give something special to their trusted brand ambassador.
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+