அதிக மைலேஜ் தரும் நுட்பத்துடன் புதிய பைக் மாடல்கள்: யமஹா சபதம்
அதிக மைலேஜ் தரும் தொழில்நுட்பத்துடன் புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக யமஹா தெரிவித்துள்ளது.
யமஹா பைக்குகள் என்றாலே அது பெர்ஃபாரமென்ஸ் வகை பைக் மாடல்களாகவே அறியப்படுகிறது. இந்த முத்திரையை நீக்கிக்கொள்ள யமஹா முடிவெடுத்துள்ளது.

இனி இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யும் மாடல்களை அதிக எரிபொருள் சிக்கனம் தரும் மாடல்களாக களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், விற்பனையை அதிகரித்து இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் தனது பங்களிப்பை வெகுவாக உயர்த்துவதே நோக்கம் என்று தெரிவித்துள்ளது.
புதிய மாடல்களில் மட்டுமில்லாமல் தற்போது விற்பனையில் இருந்து வரும் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் எஞ்சினை அதிக மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.
எனவே, இனி ஹீரோ, ஹோண்டா போன்று அதிக மைலேஜ் தரும் பைக் மாடல்கள் யமஹாவிடம் இருக்கும். இதற்காக, பைக்குகளின் எடையை குறைக்கவும், எஞ்சினில் உராய்வை குறைக்கும் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








