சென்னையில் ஃபன்-டே கொண்டாட்டம்... யமஹா ஏற்பாடு- விபரம்!

By Saravana

வரும் 18ந் தேதி சென்னையில் ஃபன்-டே என்ற சிறப்பு விழாவிற்கு யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் விதத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை யமஹா இந்தியா நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது. சாலை பாதுகாப்பு, ஓட்டுனர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

Yamaha Fun Day

இந்த வரிசையில், வரும் 18ந் தேதி சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் Fun Day என்ற விழாவிற்கு யமஹா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.00 மணிமுதல் நடைபெற இருக்கும் சிறப்பு விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பைக் மற்றும் ஸ்கூட்டருக்கான இலவச பரிசோதனை, இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கான சிறப்பு பயிற்சிகள், பைக் ஸ்டன்ட் ஷோ ஆகியவை நடைபெற உள்ளன. பெண்களுக்கான பிரத்யேக அரங்கில் நகத்தில் ஓவியம் வரைந்துகொள்ளும் வாய்ப்பை பெறலாம்.

ஸிப்பி கன்டெஸ்ட் என்ற திட்டத்தின் கீழ் யமஹா தயாரிப்புகளுக்கு சிறப்பு சலுகைகளையும் பெற முடியும். இந்த விழாவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு யமஹா இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 14, 2014, 9:43 [IST]
English summary
On 18th of October, 2014 Yamaha will be organising a Fun-Day event in Chennai. There is no entry fee and everyone is invited to join in on the celebration. Gates will open at 11:00 am on 18th October at YMCA, Nandanam, Chennai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+