பெண்கள், சிறுவருக்கான பிரத்யேக ஹெல்மெட்டுகள்: யமஹா அறிமுகம்
பெண்கள், குழந்தைகளுக்கான ஹெல்மெட்டுகளை யமஹா இருசக்கர வாகன நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்வதற்காக, டெல்லியில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமான வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட் மாடல்களை யமஹா அறிமுகம் செய்துள்ளது. பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் இந்த ஹெல்மெட்டுகளை யமஹா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஹெல்மெட் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஐஎஸ்ஐ தரச்சான்று
யமஹாவின் புதிய ஹெல்மெட்டுகள் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்றவை. இவற்றை யமஹா இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

யமஹா டீலர்களில்...
டெல்லியில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற பகுதிகளிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஹெல்மெட்டுகளை யமஹா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள யமஹா டீலர்களில் இந்த ஹெல்மெட்டுகள் விற்பனைக்கு கிடைக்கும்.

மாடல்கள்
பெண்களுக்கு எல்மோ,ஏவியோன், காஸ்மோ என்ற மாடல்களிலும், சிறுவர்களுக்கான ஹெல்மெட்டுகள் ஒயிட்நைட், புளூகிங்,பிளாக்ஸ்டார் ஆகிய மாடல்களிலும் கிடைக்கும்.

விலை
யமஹாவின் புதிய ஹெல்மெட்டுகள் ரூ.990 முதல் ரூ.1,380 வரையிலான விலையில் பிரத்யேக அம்சங்களுடன் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








