புதிய யமஹா ஆர்25 பைக்குக்கு எக்கச்சக்க டிமான்ட்: இந்திய வருகையில் தாமதம்!
இந்தோனேஷியாவில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய யமஹா ஆர்25 பைக்குக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு உற்பத்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பிற மார்க்கெட்டுகளில் இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்வதை யமஹா தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு வந்துவிடும் என்று யமஹா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நிலையில், அதற்கான வாய்ப்பு குறைந்து போயுள்ளது. எனவே, அடுத்த ஆண்டுதான் இந்த புதிய பைக் இந்தியா வரும் சூழல் நிலவுகிறது.

ஆன்லைன் புக்கிங்
ஆர் வரிசையில் யமஹாவின் முதலாவது 250 பைக்தான் யமஹா ஆர்25. இந்த புதிய பைக்கிற்கு இந்தோனேஷியாவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுகிறது.

அமோகம்
விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் நாளில் மட்டும் 2,800 பைக்குகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உற்பத்தி நெருக்கடி
இந்தோனேஷியாவில் உள்ள யமஹா ஆலையில் மாதத்திற்கு 2,000 ஆர்25 பைக்குகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால், உற்பத்தி எண்ணிக்கையை விட தேவை அதிகமிருப்பதால் பிற மார்க்கெட்டுகளில் இந்த புதிய பைக்கை அறிமுகப்படுத்துவதை தாமதப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளது.

இலக்கு
விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் ஓர் ஆண்டில் 12,000 ஆர்25 பைக்குகளை விற்பனை செய்ய யமஹா இலக்கு வைத்துள்ளது. ஆனால், இலக்கை தாண்டி விற்பனையாகும் சூழல் நிலவுகிறது.

இந்திய வருகை
அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய 250சிசி பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷிய விலை மதிப்புபடியே இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அப்படி பார்த்தால் ரூ.2.65 லட்சம் விலையில் வரலாம்.

எஞ்சின்
புதிய யமஹா ஆர்25 பைக்கில் 36 பிஎஸ் பவரையும், 22.6 என்எம் டார்க்கையும் அளிக்கும் 249சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் தலா 2 வால்வுகளை கொண்ட இரட்டை சிலிண்டர் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








