ஆக்டிவாவுக்கு போட்டியாக வருகிறது யமஹாவின் புதிய 125சிசி ஸ்கூட்டர்!
ஹோண்டா ஆக்டிவாவுக்கு போட்டியாக புதிய 125சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளது.
தற்போது ரே ஸ்கூட்டரை இரண்டு மாடல்களில் யமஹா விற்பனை செய்து வருகிறது. ரே ஸ்கூட்டரில் 7.1 பிஎஸ் பவரும், 8.1 என்எம் டார்க்கும் வழங்கும் 113சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதே எஞ்சினின் போரில் மாற்றங்களை செய்து 125சிசி எஞ்சினாக மாற்றுவதற்கு யமஹா திட்டமிட்டுள்ளது. இந்த எஞ்சினை ரே ஸ்கூட்டரிலோ அல்லது புதிய மாடலில் பொருத்தி அறிமுகம் செய்வதற்கு யமஹா திட்டமிட்டுள்ளது.
பெர்ஃபார்மென்ஸில் சிறந்ததாக மாறுவதோடு, இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொண்டதாக இருக்கும்.
வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








