இந்தோனேஷியாவில் யமஹாவின் புதிய ஆர்25 பைக் விற்பனைக்கு வந்தது!
யமஹா பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ஆர்25 பைக் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவில் கான்செப்ட் மாடலாக இருந்த இந்த புதிய பைக்கின் தயாரிப்பு நிலையின் முழு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
YZF- R25 என்ற பெயரில் வெளிவந்திருக்கும் இந்த புதிய 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக் யமஹாவின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வர இருக்கும் இந்த புதிய பைக் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

தோற்றம்
யமஹாவின் ஆர் வரிசையில் வந்திருக்கும் முதல் 250சிசி பைக் மாடல் இது. மேலும், ஆர்1, ஆர்6 மற்றும் எம்1 மோட்டோஜீபி பைக் மாடல்களின் டிசைன் தாத்பரியங்களை கலந்து கட்டி இந்த பைக்கை டிசைன் செய்துள்ளனர்.

எஞ்சின்
இந்த புதிய பைக்கில் இரட்டை சிலிண்டர் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், இதன் சிலிண்டர்கள் அலுமினியம் - சிலிக்கான் கலவையிலான டை காஸ்ட் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தை தாங்கும் வல்லமை கொண்டதோடு, எஞ்சின் எடை குறைக்க உதவியிருக்கிறது.

எஞ்சின் பவர்
இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இரட்டை சிலிண்டர் கொண்ட 249சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 35 எச்பி பவரையும், 22.6 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது.

டிசைன்
எம்-1 பைக் போன்றே இரட்டை ஹெட்லைட்டுகளும், ஒய்இசட்எஃப் - ஆர்1 பைக்கில் இருப்பது போன்ற இண்டிகேட்டர் விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் டிசைன் சீறுவது போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், இது பெர்ஃபார்மென்ஸ் பைக்காக இருப்பதோடு, நடைமுறையில் பயன்படுத்துவதற்கு எளிதானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்
2.09 மீட்டர் நீளம் கொண்ட இந்த பைக் 166 கிலோ எடை கொண்டது. 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரேக்
முன்புறத்தில் இரட்டை பிஸ்டன்கள் கொண்ட 298 மிமீ டிஸ்க் பிரேக்கும். பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் கொண்ட 220மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

விலை
இந்தோனேஷியாவில் 53 மில்லியன் இந்தோனேஷிய ரூபியா விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.71 லட்சம் விலையில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த பைக்கிற்கான முன்பதிவும் துவங்கிவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








