பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் பற்றி 10 சுவாரஸ்யமான தகவல்கள்!

Written By:

விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு மீண்டும் சேட்டக் ஸ்கூட்டர் மாடலை மீண்டும் களமிறக்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டிருக்கிறது.

மக்களின் அன்பையும், நம்பகத்தன்மையையும் பெற்ற சேட்டக் ஸ்கூட்டரில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருப்பது பலருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகவே அமைந்திருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் 10 முக்கியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெயர் காரணம்

பெயர் காரணம்

வீரமும், நாட்டுப்பற்று மிக்கவராக அறியபெறும் ரானா பிரதாப் சிங்கின் போர்க் குதிரையான சேட்டக் பற்றி சிலர் அறிந்திருப்பீர்கள். போரில் படுகாயமுற்ற நிலையிலும் அந்த குதிரை, தனது அரசனை காப்பாற்றி உயிர் நீத்தததாக வரலாறு. அந்த குதிரையின் பெயரையே தனது ஸ்கூட்டருக்கு வைத்தது பஜாஜ்.

 வெஸ்பா அடிப்படை

வெஸ்பா அடிப்படை

வெஸ்பா நிறுவனத்திடம் லைசென்ஸ் பெற்று வெஸ்பா ஸ்பிரின்ட் மாடலின் அடிப்படையில்தான் பஜாஜ் சேட்டக் உருவாக்கப்பட்டது. பஜாஜ் சூப்பர் மாடலுக்கு மாற்றாக சேட்டக் பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

1979ல் அறிமுகம் செய்யப்பட்ட சேட்டக் ஸ்கூட்டர் மாடல் 2009ம் ஆண்டு வரை மார்க்கெட்டில் இருந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம் விற்பனையில் இருந்த மாடல்.

ஹமாரா பஜாஜ்

ஹமாரா பஜாஜ்

'நம்முடைய பஜாஜ்' என்று இந்த ஸ்கூட்டர் விளம்பரப்படுத்தப்பட்டது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த விளம்பரங்களில் ஒன்று.

எஞ்சின்

எஞ்சின்

2002 வரை 2 ஸ்ட்ரோக் 145சிசி எஞ்சினுடன் வந்தது. பின்னர் 4 ஸ்ட்ரோக் எஞ்சினுக்கு மாறியது. அடுத்த ஆண்டு வரும் புதிய சேட்டக் ஸ்கூட்டரில் 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் 125சிசி எஞ்சின் இருக்கும் என்பது தகவல்.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

இந்த ஸ்கூட்டரின் இடது கைப்பிடியில் 4 ஸ்பீடு கியர் மாற்றும் வசதி இருந்தது. இதன் எஞ்சின் அதிகபட்சம் 7.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லக்கூடியதாக இருந்தது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்குடன் வந்தது.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

சேட்டக் ஸ்கூட்டர் பிராண்டில் பல புதிய ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமும் பஜாஜ் ஆட்டோவிடம் இருக்கிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ

அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

English summary
10 Things You Need To Know About Bajaj Chetak
Story first published: Tuesday, March 17, 2015, 17:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark