பஜாஜ் நிறுவனத்தின் 2016 பல்ஸர் 200என்எஸ் மோட்டார்சைக்கிள், ஜூன் 2016-க்குள் மேம்படுத்தபடும்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், தங்களின் 2016 பல்ஸர் 200என்எஸ் மோட்டார்சைக்கிளை, ஜூன் 2016-க்கு முன்னதாகவே மேம்படுத்தபட உள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
பஜாஜ் நிறுவனம் சமீப காலமாக புதிய தயாரிப்புகளின் வடிவமைப்புகள் மற்றும் உற்பத்திகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றது.

டிசைன்;
டிசைன் பொறுத்தவரை, 2016 பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் தக்கவைத்து கொள்ளபட உள்ளது.
பஜாஜ் வடிவமைப்பாளர்கள், இந்த மோட்டார்சைக்கிளின் சில அம்சங்களில் மட்டும் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்து மேம்படுத்த உள்ளனர்.

தயாரிப்பு நிறுத்தம்;
பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் மோட்டார்சைக்கிள் 2012-ஆம் ஆண்டே அறிமுகம் செய்யபட்டது.
ஆனால், வேறு பல புதிய மாடல்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததால், பஜாஜ் நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிள் மீது சரியாக கவனத்தை செலுத்த முடியாமல், பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் பைக்கின் தயாரிப்பு நிறுத்தபட்டிருந்தது.
இப்போது, மேம்படுத்தபட்டு வெளியிடபட உள்ள 2016 பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் பைக்கிற்கு புதிய இஞ்ஜின் மற்றும் டிசைன் வழங்கபடலாம் என தெரிகின்றது.

இஞ்ஜின்;
2016 பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் மோட்டார்சைக்கிளுக்கு, பல்ஸர் ஆர்எஸ் பைக்கில் உபயோகிக்கப்படும் அதே இஞ்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது.
இந்த 2016 பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் பைக்கிற்கு, 199.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்படும்.
இது ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் மற்றும் ட்ரிபிள் ஸ்பார்க் டெக்னாலஜி கொடுள்ளதாக இருக்கும்.

திறன்;
6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ள 2016 பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 24.15 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 18.6 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;
2016 பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் மோட்டார்சைக்கிள் பல்வேறு புதிய நிறங்களில் கிடைக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த பைக் ட்யூவல்-டோன் பெயிண்ட் வேலைப்பாடுகளுடன் கிடைக்க உள்ளது.

வகைபடுத்தல்;
பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 மாடல் தான், பஜாஜ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக விளங்க உள்ளது.
இந்த 2016 பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் பைக், பல்ஸர் ஆர்எஸ்200 மாடலுக்கு அடுத்தபடியாக வகைபடுத்தபட உள்ளது.

விலை;
புதிய மற்றும் மேம்படுத்தபட்ட 2016 பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் மோட்டார்சைக்கிள், தற்போது கிடைக்கும் பல்ஸர் ஏஎஸ்200 பைக்கை காட்லும் சற்று விலை கூடுதலாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
2016 பஜாஜ் பல்ஸர் 200என்எஸ் மோட்டார்சைக்கிள், சுபார் 91,553 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற விலையில் விற்கபடலாம்.

2016 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்பு?
பிப்ரவரி மாதத்தில் நடை பெற உள்ள 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பஜாஜ் நிறுவனம் பங்கேற்கபோவதில்லை என்று செய்திகள் வெளியாகின்றது.
இதனால், பஜாஜ் நிறுவனம் சார்பாக, அடுத்தடுத்து என்ன என்ன தயாரிப்புகள் வெளியாகலாம் என தெரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம்.

2016-ல் அறிமுகங்கள்;
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்காவிட்டாலும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சார்பாக, 2016-ஆம் ஆண்டில் பல்வேறு புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின்றது.


Click it and Unblock the Notifications








