விரைவில் வருகிறது புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்: டீசர் வெளியீடு!
விரைவில் விற்பனைக்கு வரும் பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் ஆர்எஸ் 200 ஸ்போர்ட்ஸ் பைக்கின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை பல்சர் 200எஸ்எஸ் என்று குறிப்பிடப்பட்டு வந்த இந்த புதிய பைக் பல்சர் ஆர்எஸ்200 என்ற பெயரில் வருகிறது. இதுதான் பஜாஜ் ஆட்டோவின் மிக அதிவேக பைக் மாடலாகவும் டீசர் மூலம் பிரபலப்படுத்தப்படுகிறது.

தற்போது நேக்டு பாடி ஸ்டைல் கொண்ட பல்சர் 200என்எஸ் பைக்கின், முழுவதும் பாடி பேனல்களால் போர்த்தப்பட்ட ஃபுல் ஃபேரிங் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வருகிறது.

பல்சர் 200என்எஸ் பைக்கில் இருக்கும் அதே 199.5சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விலை ரூ.1.50 லட்சத்திற்குள் இருக்கும். ஏற்கனவே பல பஜாஜ் டீலர்ஷிப்புகளில் இந்த பைக்கிற்கு முன்பதிவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








