சென்னை வெள்ள நிவாரணதிற்கு ரூ. 10 கோடி வழங்கிய பஜாஜ் நிறுவனம்
பஜாஜ் நிறுவனம் சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
சமீபத்தில், சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள் கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளங்களால் பாதிக்கபட்டிருந்தது. அதிக அளவில் நஷ்டங்களை ஏற்படுத்திய இந்த வெள்ளங்களால், மிக அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி, பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். சென்னை வெள்ள நிவாரண பணிகளுக்கு பஜாஜ் நிறுவனம், தங்களின் பங்காக 10 கோடி ரூபாய் தொகையை பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. இந்த 10 கோடி ரூபாயில், பஜாஜ் ஆட்டோ 5 கோடி ரூபாயும், பஜாஜ் ஃபைனான்ஸ் 5 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பஜாஜ் ஆட்டோ மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் சேர்மேனான ராகுல் பஜாஜ், "தமிழ்நாடு, அதுவும் குறிப்பாக சென்னை வரலாறு காணாத வகையிலான வெள்ள பிரச்னைகளை எதிர் கொண்டது என்றார்.

சொத்துகள் மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட வகைகளில், கோடி கணக்கான ரூபாய் அளவில் சென்னை நஷ்டங்களை எதிர்கொண்டது. இந்த நேரத்தில், சென்னையின் இந்த துயரத்தில் நாங்களும் பங்கேற்று கொள்கின்றோம் என ராகுல் பஜாஜ் கூறினார்.
இந்த நிலையில், மக்களுக்கு வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு மற்றும் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளுக்கும், நாங்களும் இணைந்து எங்களால் ஆன பணிகளை செய்து வருகின்றோம் என ராகுல் பஜாஜ் தெரிவித்தார்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன், பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஹூண்டாய், முதல் அமைச்சர் பொது நிவாரன நிதிக்கு 2 கோடி ரூபாயையும், ரெனோ-நிஸான் கூட்டணி 1 கோடி ரூபாயும் வழங்கி இருந்தது.


Click it and Unblock the Notifications








