பெனெல்லி டிஎன்டி25 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- விபரம்

By Saravana

புதிய பெனெல்லி டிஎன்டி25 பைக் இந்தியாவி விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த புதிய ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் 200சிசி மற்றும் 250சிசி பைக்குகளுக்கு நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டில் அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள, இந்த புதிய பைக்கின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கேடிஎம் பைக்கிற்கு நெருக்கடி

கேடிஎம் பைக்கிற்கு நெருக்கடி

250சிசி ரகத்தில் வந்தாலும், கேடிஎம் ட்யூக்200 பைக்கிற்கு நேரடி போட்டியை தரும். இதுவரை பெனெல்லியின் குறைவான விலை மாடலாக இருந்த டிஎன்டி300 பைக்கைவிட சிறிய தோற்ற வித்தியாசத்துடன் வந்திருக்கிறது. இந்த பைக்கில் புகைப்போக்கி குழாய் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருப்பது மிக முக்கிய வித்தியாசமாக கூறலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 28பிஎச்பி பவரையும், 21.6என்எம் டார்க்கையும் வழங்கும் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு தோராயமாக 35 கிமீ மைலேஜ் தரும் என நம்பலாம். இந்த பைக்கில் 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருப்பதால், தினசரி பயன்பாடு தவிர்த்து, நீண்ட தூர பயணங்களுக்கும் ஏதுவாக இருக்கும்.

எடை

எடை

இந்த பைக் 159 கிலோ எடை கொண்டிருப்பதால், கையாளுமைக்கும் சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அலாய் வீல்கள், முன்புறம், பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

விலை

விலை

ரூ.1.68 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 18, 2015, 13:51 [IST]
English summary
Benelli has launched the TNT25 motorcycle in India for Rs. 1.68 lakh ex-showroom (Delhi). The TNT25 is the entry-level motorcycle from the Italian brand, which has made its way to India through a partnership between Benelli and DSK.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+