பிஎம்டபிள்யூவின் புதிய டூரிங் பைக் கான்செப்ட்... விபரம்!

By Saravana

இத்தாலியில் ஆண்டுதோறும் நடைபெறும் கிளாசிக் மற்றும் விண்டேஜ் கார்களுக்கான கான்கார்சோ டி எலிகன்ஸா வில்லா டிஎஸ்டே விழாவில் தனித்துவமான டிசைன் அம்சங்கள் பொருந்திய கார் மற்றும் பைக் மாடல்களுக்கான கண்காட்சி போட்டி வெகு பிரபலம். பிஎம்டபிள்யூ குழுமம் ஏற்பாடு செய்யும் இந்த விழாவில், தனித்துவமான டிசைன் அம்சங்கள் கொண்ட மாடல்களை அதிகம் கண்டு ரசிக்கலாம்.

இந்த நிலையில், இந்த ஆண்டு விழாவிற்காக பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் புதிய டூரிங் பைக் கான்செப்ட் மாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. பிஎம்டபிள்யூ கான்செப்ட் 101 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய டூரிங் பைக் மாடல் பழமை மற்றும் எதிர்கால டிசைன் தாத்பரியங்களை சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ராட்சத தோற்றம்

ராட்சத தோற்றம்

அமெரிக்க பேக்கர் மோட்டார்சைக்கிள்களை போன்ற டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது. அதாவது, தோற்றம் அமெரிக்காவின் பழமையான மோட்டார்சைக்கிள் டிசைன் தாத்பரியங்களையும், தொழில்நுட்பங்கள் ஜெர்மானிய பாரம்பரியத்தை தாங்கி நிற்கிறது இந்த கான்செப்ட் 101.

 டிசைன் அம்சம்

டிசைன் அம்சம்

பெரும்பான்மைான பாகங்கள் மறைக்கப்பட்ட நிலையில், இதன் எஞ்சின் மட்டும் வேண்டுமென்றே உடையில்லாமல் திறந்த மேனியாக காட்சியளிக்கிறது.

 தனித்துவம்

தனித்துவம்

இந்த பைக்கின் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தனித்துவம் மேலோங்கி நிற்கிறது. அதில் ஒன்று, இதன் பக்கவாட்டில் இருபுறமும் பொருத்தப்பட்டிருக்கும் பெட்டியில் டெயில் லைட் அமைக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிளில் 6 சிலிண்டர்கள் கொண்ட, 1,649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் செயல்திறன் மறக்க முடியாத ஓட்டுதல் அனுபவத்தை ஒவ்வொரு முறையும் வழங்கும்.

டிசைன் டீம்

டிசைன் டீம்

பிஎம்டபிள்யூ குழுமத்தின் இருசக்கர வாகனப் பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் வடிவமைப்புக் குழுவினரும், ரோலண்ட் சான்ட்ஸ் டிசைன் குழுவினரும் இணைந்து இந்த மோட்டார்சைக்கிளை வடிவமைத்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 26, 2015, 13:43 [IST]
English summary
Every manufacturer two-wheeler or four-wheeler brings something unique to Concorso d'Eleganza Villa d'Este. BMW Motorrad will also be bringing a motorcycle concept, which mixes past and future models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+