டிவிஎஸ் துணையுடன் பிஎம்டபிள்யூ உருவாக்கிய முதல் பைக் கான்செப்ட்

தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சியாக கருதப்படும் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ ஆட்டோ ஷோவில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் புதிய ஸ்டன்ட் ஜி310 கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டிவிஎஸ் நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பைக் கான்செப்ட்டின் அடிப்படையிலான புதிய மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய்பட இருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு ஆலோசனை

வடிவமைப்பு ஆலோசனை

ஐரோப்பிய மற்றும் சர்வதேச சாகச மோட்டார்சைக்கிள் போட்டிகளில் பல முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற க்றிஸ் பிரிஃபர் இந்த பைக்கின் வடிவமைப்பில் ஆலோசனைகளை வழங்கி முக்கிய பங்காற்றியுள்ளார்.

 சிறந்த தயாரிப்பு

சிறந்த தயாரிப்பு

சிறப்பான ரைடிங் மற்றும் எளிதாக கட்டுப்படுத்தும் அம்சங்கள் கொண்டதாக இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக க்றிஸ் பிரிஃபர் தெரிவித்திருக்கிறார்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று பிஎம்டபிள்யூ - டிவிஎஸ் கூட்டணி தெரிவித்திருக்கிறது. அதேநேரத்தில், முழுமையான தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த எஞ்சின் 310சிசி எஞ்சினாக இருக்கும் என்பது பெயரின் மூலமாக அறிய முடிகிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அடக்கமான வடிவமும், குறைந்த வீல் பேஸும் கொண்டிருப்பதால், எளிதாக கட்டுப்படுத்த முடியும். மேலும், இதன் சைலென்சர் எஞ்சினுக்கு பின்புறத்தையொட்டி கொடுக்கப்பட்டிருப்பதால், சாகசங்களின்போது ஓட்டுபவருக்கு இடைஞ்சலான உணர்வை தராது.

நேக்டு ஸ்டைல்

நேக்டு ஸ்டைல்

அதிக அளவில் விற்பனை செய்வதற்காக, இந்த பைக்கின் அடிப்படையில் ஒரு நேக்டு ஸ்டைல் மாடல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு இந்த பைக்கின் தயாரிப்பு நிலை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 7, 2015, 13:32 [IST]
English summary
BMW Motorrad and TVS Motors are in a strategic alliance to build new motorcycles for emerging markets. The German manufacturer now reveals to us their Stunt G 310 concept motorcycle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+