ஆன்லைனில் மஹிந்திரா செஞ்சூரோ விலை ரூ.35,250 மட்டுமே!!

Written By:

மஹிந்திரா செஞ்சூரோ பைக்கை ஆன்லைன் மூலமாக வாங்குவோர் ரூ.10,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆன்லைன் வர்த்தக தளமான Paytm வழியாக மஹிந்திரா செஞ்சூரோ பைக்கை ஆர்டர் செய்வோர் இந்த ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம்.

Mahindra Centuro
 

இதில், பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையில் 10 சதவீதம் தள்ளுபடியாகவும், ரூ.5,000 பணத்தை திரும்ப பெறும் சலுகையாகவும் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவோர்க்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும். டெலிவிரியின் போது பணமாக செலுத்துவோருக்கு இந்த ஆஃபர் பொருந்தாது.

மஹிந்திரா செஞ்சூரோவின் பைக்கின் ராக்ஸ்டார், என்1 மற்றும் ஓ1 ஆகிய மூன்று மாடல்களும் இந்த ஆஃபரில் வாங்க முடியும். இதன்படி, மஹிந்திரா செஞ்சூரோ ராக்ஸ்டார் மாடல் ரூ.35,250 எக்ஸ்ஷோரூம் விலையிலும், என்1 மாடல் ரூ.38,050 விலையிலும், ஓ1 மாடல் ரூ.41,050 எக்ஸ்ஷோரூம் விலையிலும் இப்போது Paytm மூலமாக கிடைக்கிறது.

மஹிந்திரா செஞ்சூரோ பைக்கில் 106.7சிசி எம்சிஐ-5 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 8.38 பிஎச்பி பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக்கில் பல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகைக்கு பட்ஜெட் விலையில் பைக் மாடலை வாங்க விரும்புவோர் இந்த சிறப்புச் சலுகையின் மூலமாக வெகுவாக சேமிப்பை பெற முடியும்.

Story first published: Saturday, October 24, 2015, 15:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark