வெள்ளத்தால் பாதிக்கபட்ட வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா டூ வீலர்ஸ் உதவி!
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட இரு சக்கர வாகன வாடிக்கையாளர்களுக்கு உதவுதற்காக மஹிந்திரா நிறுவனம் முன் வந்துள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமான வாகனங்கள் பாதிக்கபட்டுள்ளது.
வாடிக்கையாளர்களால் எல்லா பிரச்னைகளுக்கான தீர்வுகளை தாங்களே முழு அளவில் மேற்கொள்ள முடியாது என்பது தெரிந்த விஷயம். இதனால்,
பல்வேறு 2 சக்கர நிறுவனங்களும், 4 சக்கர வாகனங்களும் தாமாகவே முன் வந்து வாடிக்கையாளர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன வந்துள்ளனர்.
அந்த வகையில், எம்டிடபுள்யூ அல்லது மஹிந்திரா டூ வீலர்ஸ் லிமிடெட் என்ற பெயரில் மஹிந்திரா இரு சக்கர வாகன பிரிவும் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட வாகனங்களுக்கு, இலவச சர்வீஸ் கேம்ப்களை எம்டிடபுள்யூ நடத்துகிறது. இது சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கும் சேர்த்து, சென்னையில் பரவலாக 19 இடங்களில் சர்வீஸ் ஸ்டேஷன்கள் ஒதுக்கபட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களின் பாதிக்கபட்ட வாகனங்களை எடுத்து கொண்டு, இந்த 19 சர்வீஸ் மையங்களுக்கு சென்றால் போதும். அங்கு அவர்களது வாகனங்களுக்கான தீர்வு செய்து தரப்படும். இதோடு மட்டுமல்லாமல், மினி சர்வீஸ் ஸ்டேஷன்கள் போல் இயங்கும் இரு சர்வீஸ் வேன்களும் இதற்காக பயன்படுத்தபடுகிறது.

எம்டிடபுள்யூ, 7 சர்வீஸ் ஆன் டூ வீல்ஸ் வாகனங்களையும் உபயோகித்து வருகின்றனர். தங்களது இரு சக்கர வாகனங்களை சர்வீஸ் ஸ்டேஷன்களுக்கு கொண்டு செல்லமுடியாத வாடிக்கையாளர்கள், வேண்டுகோள் செய்தால், அவர்களது வீட்டிற்கே வந்து இந்த பிரத்யேக வாகனம் மூலம் சர்வீஸ் செய்து தரபடுகிறது.
மேலும், எண்ணெய் மாற்றம் அல்லது உதிரி பாகங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களிடம் கூடுதல் லேபர் சார்ஜ் வாங்காமல் ரிப்பேர் செய்து தர படுகிறது.
இந்த இலவச சர்வீஸ் கேம்ப்கள் குறித்த தகவல்களை சுமார் 6,000-திற்கும் கூடுதலான வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் உள்ளிட்ட முறைகள் மூலம தகவல் பரப்பபட்டது.
இவ்வாறாக, மழை, வெள்ளத்தால் பாதிக்கபட்ட வாகனங்களுக்காக, மஹிந்திரா இரு சக்கர வாகனங்கள் பிரிவு உதவி செய்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








