ஹெல்கேட் வம்சத்தில் புதிய மாடல்... இந்த பைக்கிற்கு டோணி இந்நேரம் ஆர்டர் போட்டிருப்பாரோ...!!

இந்த செய்தியை போடுவதற்குள், இந்த புதிய ஹைப்பர் பைக்கிற்கு டோணி ஆர்டர் போட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆம், கார், பைக்குகள் மீது தீராத காதல் கொண்ட டோணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹெல்கேட் சூப்பர் பைக்கை வாங்கியிருப்பதாக ஏற்கனவே ஒரு செய்தியை வழங்கியிருந்தோம். அவர் கராஜில் இருக்கும் அதிகபட்ச விலை கொண்ட பைக் மாடலாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஹெல்கேட் பைக்கை தயாரித்த அமெரிக்காவின் கான்ஃபெடரேட் மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்து ஒரு ஹைப்பர் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர், பி51 காம்பேட் ஃபைட்டர். உலக அளவில் கோடீஸ்வரர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும், இந்த புதிய மாடல் உலகின் பணக்கார விளையாட்டு வீரரும், கார், பைக் காதலருமான டோணியின் கவனத்திற்கும் வந்திருக்கும் என நம்பலாம். இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட பல வியப்பூட்டும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இரண்டாம் தலைமுறை

இரண்டாம் தலைமுறை

கடந்த 2009ல் கான்ஃபெடரேட் மோட்டார்ஸ் நிறுவனம் முதலாம் தலைமுறை மாடலாக பி120 ஃபைட்டர் மோட்டார்சைக்கிளை வெளியிட்டது. மிரட்டலான அந்த மோட்டார்சைக்கிள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாம் தலைமுறை மாடல் பி51 காம்பேட் ஃபைட்டர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பில்லெட் அலுமினியம் பாகங்கள்

பில்லெட் அலுமினியம் பாகங்கள்

இந்த பைக்கின் மோனோகாக் சேஸீயும், எஞ்சின் கேஸிங், எரிபொருள் டேங்க் போன்றவை விமான தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 6061-டி ஏரோஸ்பேஸ் கிரேடு தரத்திலான பில்லெட் அலுமினியத்தில் செய்யப்பட்டிருக்கிறது. மிகவும் இலகு எடையும், அதிக உறுதியும் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடலாக இதனை குறிப்பிடுகின்றனர்.

பயன் என்ன?

பயன் என்ன?

இலகு எடையும், அதிக உறுதித் தன்மை கொண்ட பில்லெட் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலமாக, பைக்கின் டார்க் வெளிப்பாடு மிகச்சிறப்பாக இருக்கும். அத்துடன் ஜோரான கையாளுமையையும் வழங்கும்.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

இந்த பைக்கில் வி- ட்வின் அமைப்புடைய 2,163சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 200 எச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்புடையது.

எடை

எடை

பார்க்க அரக்கத்தனமாகவும், மூர்க்கத்தையும் வெளிப்படும் இந்த பைக் 227 கிலோ எடையுடையது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த பைக்கில் 14.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் அட்ஜெஸ்டெபிள் வசதியுடைய கர்டெர் கட்டமைப்புடன் கூடிய ஷாக் அப்சார்பரும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் அமைப்பும் உள்ளது. பிற பைக்குகள் நடுவில் இல்லாமல், இடதுபுறத்தில் இந்த மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சக்கரங்கள்

சக்கரங்கள்

ஹெல்கேட் பைக் போன்றே இந்த பைக்கின் சக்கரங்களும், கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பைக்கிற்கான பிரேக் சிஸ்டத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெரிங்கர் நிறுவனம் தயாரித்து வழங்கியிருக்கிறது.

குறைந்த எண்ணிக்கை

குறைந்த எண்ணிக்கை

மொத்தம் 61 கான்ஃபெடரேட் பி51 காம்பேட் ஃபைட்டர் பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த பைக் நிச்சயம் டோணி கராஜில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

விலை

விலை

இரண்டு மாடல்களில் இந்த பைக் வெளிவர இருக்கிறது. வெள்ளை நிறத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் 30 பி51 பைக்குகள் ரூ.75.5 லட்சம் விலையிலும், கருப்பு நிறத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் 31 பி51 பைக்குகள் ரூ.79.5 லட்சத்திலும் கிடைக்கும். இந்தியாவில் இறக்குமதி செய்யும்போது விலை ஒரு கோடியை தாண்டும்.

தொடர்புடைய செய்தி
Most Read Articles
English summary
The American based high end bike maker, Confederate Motors set its sights on a 200-hp V-twin as the next evolution of the collectible Fighter series.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X