புதிய பெனெல்லி பைக்குகளுக்கு முன்பதிவு துவங்கியது... சென்னை மொபைல் எண்!
வரும் 19ந் தேதி புதிய பெனெல்லி பைக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கப்பட்டிருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம் இந்தியாவின் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் கூட்டணியுடன் சேர்ந்து தனது பிரிமியம் ரக பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

கடந்த மாதம் கோவாவில் நடந்த பைக் வீக் திருவிழாவில் இந்த புதிய பிரிமியம் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், புதிய பெனெல்லி பைக்குகளுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. மொபைல் எண்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் புதிய பெனெல்லி பைக்குகளை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் கீழ்கண்ட மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை: +91 9176626655
ஆமதாபாத்: +91 800070090
பெங்களூர்: +91 9591073333
டெல்லி: +91 8588847598
கோவா: +91 9422443287
ஹைதராபாத்: +91 9885004004
கோல்கட்டா: +91 9831639393
மும்பை:+91 8082059999
புனே:+91 7030955220


Click it and Unblock the Notifications








