டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 400 பைக் அறிமுகம்... குறைவான விலை மாடல்!!

Written By:

இத்தாலியின் மிலன் நகரில் துவங்கியிருக்கும் இஐசிஎம்ஏ இருசக்கர வாகன கண்காட்சியில், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 400 பைக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் Sixty2 என்ற பெயரில் இந்த புதிய டுகாட்டி பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு அதிகமிருக்கும் இந்த புதிய மாடலின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை குறைவான டுகாட்டி

விலை குறைவான டுகாட்டி

டுகாட்டி நிறுவனத்தின் மிக குறைவான விலை மாடலாக டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் சிக்ஸ்டி2 மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது இந்தியாவில் 800சிசி டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மாடல்கள் விற்பனைக்கு இருக்கும் நிலையில், குறைவான விலை கொண்ட இந்த புதிய டுகாட்டி பைக் இந்தியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் Sixty2 மாடலில் இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 399சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 41 எச்பி பவரை அளிக்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

எடை

எடை

இந்த புதிய பைக் 167 கிலோ எடை கொண்டது. மேலும், 14 லிட்டர் ஸ்டீல் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

ஓசியன் கிரே, சிக்னன் பிளாக் மற்றும் அட்டாமிக் டேங்கரின் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

6,900 டாலர்கள் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.4.55 லட்சம் விலை கொண்டதாக இருக்கிறது.

 
English summary
Ducati Scrambler 400 unveiled in EIMCA Auto Show in Italy.
Story first published: Tuesday, November 17, 2015, 11:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark