கவாஸாகி இசட்800 பைக்கின் முதல் கேரள பெண் உரிமையாளர்!

Written By:

கேரளாவில், கவாஸாகி இசட்800 ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கிய முதல் பெண் உரிமையாளர் என்ற பெருமையை கலாரென்ஜினி பெற்றிருக்கிறார்.

ஷோரூமிலிருந்து அந்த பைக்கை அவர் சமீபத்தில் டெலிவிரி பெற்றார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

கொச்சி ஷோரூம்

கொச்சி ஷோரூம்

கொச்சியிலுள்ள கவாஸாகி ஷோரூமில்தான் அவர் இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை முன்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை அவர் டெலிவிரி பெற்றிருக்கிறார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

கவாஸாகி இசட்800 ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கும் கேரளாவின் முதல் பெண் உரிமையாளர் என்பதற்காக, அந்த ஷோரூமை சேரந்தவர்கள் கேக் வெட்டி கொண்டாடி சாவியை வழங்கினர். மேலும், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மிரட்டலான தோற்றம்

மிரட்டலான தோற்றம்

கவாஸாகி பைக்குகளுக்கே உரித்தான அந்த மிரட்டலான தோற்றம் இந்த பைக்கிற்கும் தனித்துவத்தை கொடுக்கிறது. ஹெட்லைட்டிலிருந்து, பெட்ரோல் டேங்க், புகைப்போக்கி குழாய், வால்பகுதி என அனைத்திலும் அந்த மிரட்டலை நீங்கள் காணலாம்.

சக்திவாய்ந்த மாடல்

சக்திவாய்ந்த மாடல்

இந்த பைக்கில் இருக்கும் 806சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 113 பிஎஸ் பவரையும், 83 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களில் ஒன்று.

எடை

எடை

இந்த பைக் 229 கிலோ எடை கொண்டது. இருப்பினும், எளிதாக கையாளும் வகையிலான சக்திவாய்ந்த எஞ்சினுடன் மிரட்டுகிறது.

 தாய்லாந்தில் அசெம்பிள்

தாய்லாந்தில் அசெம்பிள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கவாஸாகி இசட்800 பைக் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

 விலை

விலை

ரூ.7.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நேர் போட்டியாளராக ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் மோட்டார்சைக்கிளை கூறலாம். அந்த பைக் ரூ.7.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 
English summary
First lady owner of the Kawasaki Z800 in Kerala.
Story first published: Thursday, December 17, 2015, 14:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark