தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஓர் அற்புதமான பைக்!

By Saravana

தரையிலும், தண்ணீரிலும் செல்லும் சிறப்பம்சங்களை கொண்ட புதிய பைக் மாடலை ஆம்பிபியஸ் வாகன வடிவமைப்பில் கேதேர்ந்த ஆலன் கிப்ஸின் நிறுவனத்தார் உருவாக்கியிருக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வரும், சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இந்த புதிய ஆம்பிபியஸ் பைக் மாடல், காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அற்புதமான ஆம்பிபியஸ் பைக்கின் செயல்பாடுகளையும், படங்கள் மற்றும் வீடியோவை ஸ்லைடரில் காணலாம்.

பிஸ்கி பைக்

பிஸ்கி பைக்

தரையிலும், தண்ணீரிலும் செல்லும் க்வாட் பைக், டிரக், எஸ்யூவி போன்ற பல வாகனங்களை ஆலன் கிப்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. அந்த வரிசையில், தற்போது வந்திருக்கும் பிஸ்கி என்ற இந்த ஆம்பிபியஸ் மோட்டார்சைக்கிள் பலரையும் கவர்ந்துள்ளது. தொழிலதிபரும், ஆம்பிபியஸ் வாகன வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவருமான ஆலன் கிப்ஸ் எண்ணத்தில்தான் இந்த புதிய பைக் மாடலும் உருவாகியிருக்கிறது.

அங்கீகாரம்

அங்கீகாரம்

இந்த பைக்கை சாலைகளில் செலுத்துவதற்கு அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது. எனவே, இதனை தண்ணீரிலும், தரையிலும் பயன்படுத்த எந்த தடையும் இருக்காது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஆம்பிபியஸ் பைக்கில் 2 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. தரையைவிட தண்ணீரில் மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

 செயல்திறன்

செயல்திறன்

தரையில் மணிக்கு 128 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மணிக்கு 59 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் கொண்டது.

எடை

எடை

இந்த பைக் 228 கிலோ எடை கொண்டது. ஆனாலும், மிக எளிதாக இயக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எளிது

எளிது

வெறும் 5 வினாடிகளில் தரையிலிருந்து தண்ணீருக்கு தகுந்தவாறும், தண்ணீலிருந்து தரைக்கு தகுந்தவாறும் தொழில்நுட்ப அம்சங்கள் மாறிக்கொள்ளும். இதற்கு ஒரு சிறிய பொத்தானை அழுத்தினால் போதுமானது.

இழுவிசை

இழுவிசை

தண்ணீரில் செல்லும்போது இழுவிசையை குறைப்பதற்காக, முன்சக்கரம் தண்ணீரிலிருந்து சற்று மேல்நோக்கி இருக்குமாறு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

உற்பத்தி

உற்பத்தி

சாலையில் இயக்குவதற்கான விதிகளுக்கு உட்பட்ட இந்த மாடல் முழு அளவிலான உற்பத்திக்கு விரைவில் செல்கிறது. இன்னும் விலை விபரம் அறிவிக்கப்படவில்லை.அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் எமது வாடிக்கையாளர்கள் விரைவில் இந்த ஆம்பிபியஸ் பைக்கை வாங்குவதற்கான வாய்ப்பை பெறுவர்.

 ஜேம்ஸ்பாண்ட் பைக்

ஜேம்ஸ்பாண்ட் பைக்

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளதாக, ஆட்டோமொபைல் துறையினர் கமென்ட் அடிக்கின்றனர். இது தண்ணீர் விளையாட்டு சாகச பிரியர்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும்.

Most Read Articles
English summary
The Biski Motorbike is a gadget fit for Bond himself. The high-speed motorbike is amphibious and can transform into a jet ski at the flick of a switch.
Story first published: Wednesday, October 21, 2015, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X