டீலரிலிருந்து ஹார்லி டேவிட்சன் பைக்கை ஆட்டையை போட்ட இளைஞர்

Written By:

ஹைதராபாத்தில், டெஸ்ட் டிரைவ் என்ற பெயரில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை இளைஞர் ஒருவர் திருடிச் சென்றார்.

பல லட்ச ரூபாய் மதிப்புடைய அந்த பைக்கை மிக சாமர்த்தியமாக விற்பனை நிலையத்திலிருந்து திருடிச் சென்ற, அவரை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

விற்பனை நிலையம்

விற்பனை நிலையம்

ஹைதராபாத்தின் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில், ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான அங்கீகாரம் பெற்ற விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த 30வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க அணுகியுள்ளார்.

டெஸ்ட் டிரைவ்

டெஸ்ட் டிரைவ்

அப்போது, டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான விண்ணப்பத்தில் அவரது விபரங்களை வாங்கிக் கொண்டு பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்ய கொடுத்துள்ளனர். ஆனால், அந்த பைக்கை எடுத்துச் சென்ற அந்த இளைஞர் திரும்பி வரவில்லை.

 போலிசில் புகார்

போலிசில் புகார்

பஞ்சரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில், இதுகுறித்து விற்பனை நிலைய மேலாளர் புகார் அளித்தார். இதையடுத்து, இளைஞர் கொடுத்த விபரங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அவரது பெயர் தாஹீர் அலி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

போலியான தகவல்கள்

போலியான தகவல்கள்

அவர் கொடுத்த மொபைல்போன் எண் மற்றும் இ-மெயில்களை ஆய்வு செய்தபோது, அனைத்தும் போலியாக இருந்தது. இதையடுத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த வாலிபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

 விலை மதிப்பு

விலை மதிப்பு

திருடிச் செல்லப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக் ரூ.5.7 லட்சம் மதிப்புடையது என்று சம்பந்தப்பட்ட விற்பனை நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விலையுயர்ந்த பைக்குகளை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, டீலரை சேர்ந்த விற்பனை பிரதிநிதியும் உடன் செல்வார். ஆனால், டீலரிலிருந்த பணியாளர்களின் கவனக்குறைவால் அந்த பைக்கை எளிதாக அவர் திருடிச் சென்றிருப்பதாக கருதப்படுகிறது.

 
English summary
Harley Davidson Bike Stolen During Test Drive in Hyderabad.
Story first published: Wednesday, September 2, 2015, 12:20 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos