ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளுக்கு ரீகால்!
கனடாவில், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் 500 மோட்டார்சைக்கிள்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
இந்த இரு பைக் மாடல்களின் எரிபொருள் உட்செலுத்தும் அமைப்பின் கசிவடைப்பு முத்திரையில் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

எரிபொருள் குறைவாக இருக்கும்போதும், ஆக்சிலரேஷன் உச்சத்தை தொடும்போதும், எரிபொருள் சப்ளையில் தடை ஏற்படும் நிலை உள்ளது.
இது விபத்துக்கும் வழிகோலும் என்பதால், இந்த ஆண்டு கனடாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் 666 மோட்டார்சைக்கிள்களை ஆய்வு செய்ய ஹார்லி டேவிட்சன் முடிவு செய்துள்ளது.
இந்த பிரச்னைக்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் ரீகால் அறிவிப்பை ஹார்லி டேவிட்சன் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளும் விரைவில் திரும்ப அழைக்கப்படும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








