ஹீரோ டூயட் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் விபரம்!

By Saravana

டெல்லியில் நடந்த விழாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டருடன் சேர்த்து, புதிய ஹீரோ டூயட் ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை தொடர்ந்து, விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் இரு பாலரையும் கவரும் அம்சங்களை பெற்றிருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், முன்புறத்தில் லக்கேஜ் பாக்ஸ், ஸ்டோரேஜ் பகுதிக்கான விளக்கு, த்ராட்டில் பொசிஷன் சென்சார், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், ரிமோட் மூலம் பெட்ரோல் டேங்க் மூடியை திறக்கும் வசதி, மொபைல் சார்ஜர், இரட்டை பார்க்கிங் விளக்குகள், ஹெட்லைட் பாஸ் சுவிட்ச், சர்வீஸ் ரிமைன்டர் போன்ற வசதிகள் இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இன்று அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் இடம்பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 8.31 பிஎச்பி பவரையும், 8.30 என்எம் டார்க்கையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரும் லிட்டருக்கு 63.8 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஐபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஹோண்டாவின் காம்பி பிரேக் சிஸ்டம் போன்ற, ஹீரோவின் ஐபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், ஒரு பிரேக் லிவரை பிடித்தாலும், இரு சக்கரங்களிலும் பிரேக்குகளும் இணைந்து செயல்படும். இது சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.

ஸ்டோரேஜ் பகுதி

ஸ்டோரேஜ் பகுதி

இந்த ஸ்கூட்டரில் இருக்கைக்கு கீழே 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டை இந்த இடத்தில் வைக்க முடியும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கேண்டி பிளேஸிங் ரெட், பியர்ல் சில்வர், க்ரேஸ் க்ரே, மேட் நேச்சர் க்ரீன், பாந்தர் பிளாக் மற்றும் வெர்னியர் க்ரே ஆகிய வண்ணங்களில் வருகிறது.

 விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த மாதம் 13ந் தேதி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து, தீபாவளிக்கு முன்னதாக இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 29, 2015, 16:49 [IST]
English summary
Hero MotoCorp has unveiled the Duet scooter, and will be launched shortly in India. The Hero Duet will share the same engine as the Maestro Edge—a 110cc, four-stroke, single-cylinder air-cooled engine that develops 8.31 bhp and 8.3 Nm of torque, mated to an auto transmission. According to Hero MotoCorp, the Duet will return a fuel economy of 63.8 km/litre.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+