புதிய வசதியுடன் ஹீரோ ஈ-ஸ்ப்ரிண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.

By Ravichandran

இரண்டு டிரைவிங் ஆப்ஷனில் இயங்கும் வசதியுடன் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஈ-ஸ்ப்ரிண்ட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்தை கொண்டு இயங்கும் போக்குவரத்து வாகனங்களின் விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக் முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில், புதிய வசதிகளுடன் கூடிய ஓர் சிறப்பான மாடலாக, ஈ-ஸ்ப்ரிண்ட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர்களுக்கு மத்திய அரசின் மானிய திட்டத்தின் கீழ் சிறப்பு சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Hero E Sprint

மத்திய அரசின் சிறப்பு மானிய திட்டத்தின் கீழ், இது போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்குவதற்கு ரூ.29,000 ரூபாய் வரை வாடிக்கையாளர்களுக்கு மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஈ-ஸ்ப்ரிண்ட் ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்;

சாலைகளில் வழுக்காமல் இருக்க, ஆண்டி-ஸ்கிட் டிஸ்க் பிரேக்குகள், பஞ்சர்ககளை தாங்கக்கூடிய ட்யூப்கள், சிறந்த வெளிச்சத்திற்கு பாலி கார்பனேட் ஹெட் லாம்புகள் போன்ற அம்சங்கள் உள்ளன.

மேலும், ஈ-ஸ்ப்ரிண்ட் ஸ்கூட்டரில் 10 இஞ்ச் அலாய் சக்கரங்கள், முன்புறத்தில் டெலெஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், தூரத்தை கணக்கிட ஒடோமீட்டர் உள்ளது. இது, பவர் மோட் மற்றும் எகானமி மோட் எனப்படும் இரண்டு பவர் மோட்களில் இயங்கும்.

ஈ-ஸ்ப்ரிண்ட் பேட்டரி;

இந்த ஈ-ஸ்ப்ரிண்ட் ஸ்கூட்டரில், 48V/33AH திறன் கொண்ட பேட்டரியும், 800 வாட்ஸ் மின் மோட்டாரும் உள்ளது. இது 1200 வாட்ஸ் வரை உச்ச சக்தியை வெளியிடும் திறன் கொண்டுள்ளது. மேலும், இதில் பல நிலை ஐ.சி சார்ஜர் மற்றும் மொபைல் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.


ஈ-ஸ்ப்ரிண்ட் எடை விபரம்;

மொத்தமாக 106 கிலோகிராம் எடை கொண்ட ஈ-ஸ்ப்ரிண்ட்டின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 150 மில்லிமீட்டராக உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரில், அதை ஓட்டுபவர் மற்றும் பின் இருக்கை பயணியும் சேர்ந்து சென்றாலும் கூட, ஏழு டிகிரி வரை செங்குத்தான சாலைகளிலும் பயணிக்க முடியும்.

ஈ-ஸ்ப்ரிண்ட் கிடைக்கும் வண்ணங்கள்;

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், ஈ-ஸ்ப்ரிண்ட் ஸ்கூட்டரை சிகப்பு, சில்வர், பிளாக் மற்றும் சாம்பல் என நான்கு நிறங்களில் வழங்குகிறது. ரூ.47,990 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வகைகள்;

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது, ஹை ரேஞ்ஜ், ஹை ஸ்பீட் மற்றும் எலக்ட்ரிக் சைக்கிள் உள்ளிட்ட மூன்று வகைகளில் கிடைக்கிறது.

ஹை ரேஞ்ஜ் ஈ-பைக்கு ரகத்தில், வேவ், மேக்ஸி, க்ரூஸ் மற்றும் ஆப்டிமா+ உள்ளிட்ட வாகனங்கள் கிடைக்கின்றன.

ஹை ஸ்பீட் ஈ-பைக்கு ரகத்தில், ஃபோட்டான் மற்றும் ஈ-ஸ்பிரிண்ட் உள்ளிட்ட வாகனங்கள் கிடைக்கின்றது. எலக்ட்ரிக் சைக்கிள்ஸ் ரகத்தில், ஏவியார் ஏ ஃப் எக்ஸ் மற்றும் ஏ எம் எக்ஸ் போன்ற வாகனங்கள் கிடைக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, October 12, 2015, 15:33 [IST]
English summary
Hero Electric E-Sprint scooter has been launched at an attractive price of INR 47,990 (ex-showroom, Mumbai).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+