ஹோண்டா போகட்டும் போடா... இப்போ ஹீரோவின் நிலைமைய பார்த்தீங்களா!!

Written By:

ஹோண்டா நிறுவனத்தின் உதவி இல்லாததன் வலியையும், நெருக்கடியையும் ஹீரோ பெரிதும் அனுபவித்து வருகிறது. அதாவது குறித்த காலத்தில் ஒரு புதிய தயாரிப்பை வெளியிட முடியாமல் தவித்து வருகிறது. ஆம், அந்த நிறுவனம் தனது முதல் ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இதனால், அந்த புதிய 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கின் அறிமுகம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது. மேலும், அமெரிக்காவிலிருந்து இந்த புதிய பைக்கின் தயாரிப்புப் பணிகள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டிருப்பதாவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் ஸ்போர்ட்ஸ் பைக்

முதல் ஸ்போர்ட்ஸ் பைக்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எச்எக்ஸ்250ஆர் என்ற பெயரில் தனது முதல் 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை தயாரித்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய பைக்கை தயாரித்து வந்தது.

பின்னடைவு

பின்னடைவு

அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. மேலும், திவாலாகி விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஒத்துழைப்பில் தயாரிக்கப்பட்டு வந்த எச்எக்ஸ்250ஆர் பைக்கின் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மாற்றம்

மாற்றம்

எரிக் புயெல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதையடுத்து, அந்த நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்க உள்ளது. இதற்காக, எரிக் புயெல் வசம், கொடுத்திருந்த பைக் தயாரிப்புப் பணிகளை திரும்ப பெற்று, அதனை இந்தியாவிலேயே தயாரிக்க ஹீரோ முடிவு செய்துள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

எப்படியாவது, இந்த புதிய பைக்கை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்துவிட வேண்டும் என்று ஹீரோ நினைக்கிறது. ஆனால், தயாரிப்புப் பணிகளில் எழுந்திருக்கும் சிக்கல்கள் காரணமாக, உறுதியான தகவலை அந்த நிறுவனம் அளிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.

பைக் விபரம்

பைக் விபரம்

ஹீரோ எச்எக்ஸ்250ஆர் ஃபேரிங் பேனல்களால் மூடப்பட்ட உடலமைப்பு கொண்ட ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வருகிறது. மேலும், இந்தியாவில் கோலோய்ச்சி வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களுக்கு நெருக்கடியை கொடுப்பதற்காகவே, சிறந்த தயாரிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தை தொழில்நுட்ப கூட்டாளியாக ஆக்கியது. ஆனால், அந்த கூட்டாளியால் இப்போது பயனற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

புதிய தொழில்நுட்ப பார்ட்னர்

புதிய தொழில்நுட்ப பார்ட்னர்

எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தின் உதவி கிடைக்காத நிலையில், புதிய தொழில்நுட்ப பார்ட்னரை இணைத்துக் கொள்ளவும் தயாராக இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. ஆனால், அது உடனடியாக நடக்குமா என்பதும் தெரியவில்லை.

ஹோண்டா போகட்டும் போடா..

ஹோண்டா போகட்டும் போடா..

மிக நீண்டகாலமாக இந்திய சந்தையில் மிகப் பெரும் வெற்றிக்கூட்டணியாக ஹீரோவும், ஜப்பானை சேர்ந்த ஹோண்டாவும் இணைந்து செயல்பட்டு வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் கூட்டணியிலிருந்து ஹோண்டா கழன்று கொண்டதையடுத்து, ஹீரோவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், ஹோண்டா போனதால், யாதொரு நெருக்கடியும் இல்லை என ஹீரோ பூசி மெழுகியது. ஹோண்டா இடத்திற்கு மாற்றாக பல புதிய தொழில்நுட்ப பார்ட்னர்களை கோடி கோடியாய் கொட்டி கொடுத்து விலை பேசி வாங்க முயற்சித்து வருகிறது. ஆனால், ஒன்றும் உருப்படியாக இல்லை.

 
English summary
Hero HX250R Sports Bike Launch Delayed To Next Year.
Story first published: Thursday, September 3, 2015, 15:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark