ஹீரோ கரீஷ்மா பைக்கை அட்டகாசமாக மாற்றிய மும்பை நிறுவனம்!
ஹீரோ கரீஷ்மா பைக்கை மிக சிறப்பான முறையில் கஸ்டமைஸ் செய்து அசத்தியிருக்கிறது மும்பையை சேர்ந்த ரோடு ரேஜ் கஸ்டம் பில்ட்ஸ் நிறுவனம்.
வாடிக்கையாளின் விருப்பத்தின் பேரில் இந்த கஸ்டமைஸ்டு மாடலை உருவாக்கி தந்திருப்பதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும், அந்த பைக்கின் அட்டகாசமான படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

பெயர்
கரீஷ்மா ஆர்ஆர் என்று இதற்கு பெயரிட்டிருக்கின்றனர். அதாவது, கரீஷ்மா ரோடு ரேஜ் என்று பொருள் கூறுகின்றனர்.

பிரத்யேக வண்ணம்
கருப்பு வண்ண மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருப்பதுடன், ஃப்ரேம் மட்டும், ஃப்ளோரசன்ட் பச்சை வண்ணம் தீட்டப்பட்டு கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோற்றமளிக்கிறது.

சஸ்பென்ஷன்
இந்த பைக்கில் கேடிஎம் டியூக் பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் இன்வர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மற்றொரு கேடிஎம் பாகம்
பின் சக்கரத்திற்கும், ஃப்ரேமுக்கும் பாலமாக இருந்து தாங்கிப் பிடிக்கும் ஸ்விங் ஆர்ம் கூட கேடிஎம் ட்யூக் பைக்குடையது என்று கஸ்டமைஸ் செய்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரேக் சிஸ்டம்
முன்புறத்திலும், பின்புறத்திலும் காலிபர் மற்றும் சிங்கிள் டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஹெட்லைட்
வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும் விதத்தில் முன்புறத்தில் வி வடிவிலான ஹெட்லைட் ஸ்கூப் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதில், 18 வாட் எல்இடி ஹெட்லைட்டுகளும், பகல்நேர விளக்குகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று, எல்இடி இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிசைன்
மிக தாழ்வான இருக்கை, வித்தியாசமான டிசைன் கொண்ட பெட்ரோல் டேங்க் என ஒவ்வொரு பாகமும் மிகச்சிறப்பான முறையில் ரசனையுடன் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications