புது 'ஹீரோ'வுடன் 'டூயட்' பாட நீங்க ரெடியா?
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் விரைவில் டூயட் என்ற பெயரில் புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா மார்க்கெட்டை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹோண்டாவின் துணையில்லாமல், ஹீரோ நிறுவனம் உருவாக்கியிருக்கும் புதிய மாடல்களில் இதுவும் ஒன்று. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டூயட்
இதுவரை டேஷ் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த ஸ்கூட்டரை டூயட் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம்.

எஞ்சின்
இந்த புதிய ஸ்கூட்டரில் 8.4 எச்பி பவரையும், 9.4 என்எம் டார்க்கையும் வழங்கும் 110சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்ட்டிருக்கும்.

இருபாலருக்குமான மாடல்
இந்த ஸ்கூட்டரை இரு பாலரும் ஓட்டுவதற்கான அம்சங்களை கொண்டிருக்கும். மேலும், முழுவதும் மெட்டல் பாடியுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் போட்டியாளர்களுக்கு நெருக்கடியை தரும் என ஆட்டோமொபைல் வட்டாரங்கள் ஆருடம் கூறுகின்றன.

எதிர்பார்க்கும் விலை
ரூ.55,000 முதல் ரூ.60,000க்கும் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை?
இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








