மேம்படுத்தப்பட்ட ஹீரோ டீலக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்
அனைத்து பைக் மாடல்களுக்கும் புதுப்பொலிவு கொடுத்து அறிமுகம் செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். சமீபத்தில் பேஷன் ப்ரோ பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்தது.
இதனைத்தொடர்ந்து, தற்போது டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் ஈக்கோ மாடல்களை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பைக்கிலும் எஞ்சின் செயல்திறன் சற்று அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வண்ணங்கள்
ஹீரோ டீலக்ஸ் பைக் ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். புதிதாக அரக்கு வண்ணம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஆரஞ்ச், கருப்பு- சிவப்பு கலவை, கருப்பு- ஊதா கலவை மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். டீலக்ஸ் ஈக்கோ மாடல் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாடல் என்பதை தெரிவிக்கும் விதமாக அதே கிளி பச்சை நிறத்தில் மட்டும் வந்துள்ளது.

எஞ்சின்
இந்த புதிய மாடல்களில் இருக்கும் 97.2சிசி எஞ்சின் தற்போது 8.36 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் வழங்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 4 ஸ்பீடு மேனுவர் கியர்பாக்ஸ் உள்ளது.

டீலக்ஸ் ஈக்கோ ஸ்பெஷல்
டீலக்ஸ் ஈக்கோ பைக்கில் அதிக ஏரோடைனமிக்ஸை வழங்கும் விங் ரியர் வியூ கண்ணாடிகளும், தடையற்ற உருளுதல் தன்மை கொண்ட டயர்களும் பொருத்தப்பட்டிருப்பதால், சற்று கூடுதல் மைலேஜை வழங்கும்.

பிரேக், சஸ்பென்ஷன்
இரு டீலக்ஸ் பைக் மாடல்களிலும் முன்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின்புறத்தில் 2 ஸ்டெப் அட்ஜெஸ்ட் கொண்ட ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. முன்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்கும், பின்புறத்தில் 110மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை விபரம்
டீலக்ஸ் கிக் ஸ்டார்ட் + ஸ்போக் வீல்: ரூ.42,100
டீலக்ஸ் கிக் ஸ்டார்ட் + அலாய் வீல்: ரூ.43,000
டீலக்ஸ் செல்ஃப் ஸ்டார்ட் + ஸ்போக் வீல்: ரூ.44,150
டீலக்ஸ் செல்ஃப் ஸ்டார்ட் + அலாய் வீல்: ரூ.45,150
டீலக்ஸ் ஈக்கோ: ரூ.46,150
அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்


Click it and Unblock the Notifications








