ஹீரோ டூயட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!
கவர்ச்சிகரமான விலையில், புதிய ஹீரோ டூயட் ஸ்கூட்டர் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா ஆக்டிவா மார்க்கெட்டை உடைப்பதற்காக, ஹீரோ அறிமுகம் செய்து வரும் ஸ்கூட்டர் மாடல்களில் புதிய வரவாக குறிப்பிடலாம்.
சமீபத்தில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டருடன் சேர்த்து, இந்த புதிய டூயட் ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில், இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறப்பம்சங்கள்
வெளியிலிருந்து பெட்ரோல் நிரப்புவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்க் மூடி, மொபைல் சார்ஜர், பொருட்கள் வைக்கும் இடத்திற்கான விளக்கு, டிஜிட்டர்/ அனலாக் ஸ்பீடோமீட்டர் ஆகியவை முக்கியமான சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

எஞ்சின்
புதிய ஹீரோ டூயட் ஸ்கூட்டரில் 8.31 பிஎச்பி பவரையும், 8.30 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 110.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதர அம்சங்கள்
ட்யூப்லெஸ் டயர்கள், முன்புற, பின்புற பிரேக் சிஸ்டத்தை ஒருங்கிணைந்த வகையில் இயக்கக்கூடிய ஐபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், 12 இன்ச் சக்கரங்கள் ஆகியவை முக்கியமானவையாக குறிப்பிடலாம்.

வண்ணங்கள்
கருப்பு, சிவப்பு, வெள்ளை, பச்சை, சாம்பல் மற்றும் மேட் ஃபினிஷ் கொண்ட சாம்பல் வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்
ஹீரோ டூயட் ஸ்கூட்டரின் விஎக்ஸ் வேரியண்ட் ரூ.48,400 பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எல்எக்ஸ் வேரியண்ட் ரூ.49,900 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








