ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ரோ புதுப்பொலிவுடன் விற்பனைக்கு அறிமுகம்

By Staff

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிளென்டர் ப்ரோ பைக்கினை புதிய பொலிவுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

முக்கிய போட்டி நிறுவனமான ஹோண்டாவிடம் இருந்து எழும் சந்தை சவால்களை சமாளிக்க, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மாற்றங்களுடன் இந்த புதிய மாடலை களமிறக்கியுள்ளது.

New Splendor Pro

புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், புதிய இருக்கை, இன்டிகேட்டர்கள், பாடி கலர் சைடு மிரர்கள், புதிய கிராப் ரெயில், டெயில் க்ளஸ்ட்டர் என பல புதிய மாற்றங்களை பெற்றிருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் முதலில் ஸ்பிளென்டர் பைக்கினை ஒரு எளிமையான இரு சக்கர வாகனமாகவே மக்களிடம் வழங்கியது. பின்னர் 2010-ஆம் ஆண்டு முதல், ஸ்பிளெண்டருக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட ஸ்பிளென்டர் ப்ரோ-வை விற்க துவங்கியது.

இந்திய இரு சக்கர வாகன சந்தையில், குறைவான விலையில், நீடித்து உழைக்ககூடிய பயணியர் மோட்டர்சைக்கிள்களை வழங்குவதில், ஹீரோ மோட்டோகார்ப் தான் முன்னணியில் உள்ளது.

ஜப்பானிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா இந்தியா ஏறக்குறைய அதன் அனைத்து மோட்டர்சைக்கிள்களையும் புதுப்பித்து வழங்கி கொண்டிருக்கிறது. இளம் தலைமுறையினரை கவரும் வகையில், "லீவோ" என்ற பைக்கினையும் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது, புதிய பொலிவுடன் வெளியாகும் ஸ்பிளென்டர் ப்ரோ பைக்கினை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. இந்த புதிய பைக்கின் விலை, முந்தைய பைக் மாடலின் விலையை காட்டிலும் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் மட்டுமே கூடுதலாக இருக்கும் என தெரிகிறது.

தற்போது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுனத்திடம் இருந்து, ஸ்பிளென்டர் ப்ரோ, ஸ்பிளென்டர் ப்ரோ கிளாசிக், ஸ்பிளென்டர் + மற்றும் ஸ்பிளென்டர் ஐமார்ட் உள்ளிட்ட மோட்டர்சைக்கிள்கள் கிடைக்கின்றன. இவற்றில், மிகவும் விலை குறைந்த பைக்கான ஸ்பிளென்டர் ப்ரோ 46.537 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) விலையில் கிடைக்கின்றது.

சமீபத்தில் தான், இந்த நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்களை காட்சிபடுத்தியது. இந்த ஸ்கூட்டர்கள் அதன் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை கூட்டி, இரு சக்கர வாகன சந்தையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுனத்தை முன்னிலைபடுத்தும் என கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 13, 2015, 11:06 [IST]
English summary
Hero MotoCorp will be providing its Splendor Pro with a much-needed facelift.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+