5 மாதங்களில் ஒரு மில்லியன்: ஹோண்டா ஆக்டிவாவின் புதிய சாதனை!

By Saravana

விற்பனையில் ஹோண்டா ஆக்டிவா ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய சாதனையை படைத்து வருகிறது. சமீபத்தில் ஒரு கோடி விற்பனை சாதனையை தொட்டு அசத்திய ஹோண்டா ஆக்டிவா இப்போது மற்றொரு விற்பனை சாதனையை பதிவு செய்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் [ஏப்ரல்- ஆகஸ்ட்] ஒரு மில்லியன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

Honda Activa

மேலும், வெறும் 5 மாதங்களில் விற்பனையில் ஒரு மில்லியன் என்ற எண்ணிக்கையை தொட்ட இந்தியாவின் முதல் இருசக்கர வாகன மாடல் என்ற பெருமையும் ஹோண்டா ஆக்டிவாவுக்கு கிடைத்திருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே விற்பனையில் தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 1 இருசக்கர வாகன மாடல் என்ற பெருமையையும் பெற்று வருகிறது. கடந்த மாதம் மட்டும் 2.17 லட்சம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

டிசைன், எஞ்சின், கட்டுமானத் தரம் போன்ற காரணங்களுடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு சிறந்த போக்குவரத்து தீர்வாகவும் இருப்பது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனையை மாத்ததிற்கு மாதம் அதிகரித்துச் செல்கிறது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 110சிசி எஞ்சின் மற்றும் 125சிசி என கொண்டதாக மூன்றுவிதமான மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 26, 2015, 10:16 [IST]
English summary
India's most loved scooter Activa has dethroned all motorcycle models to become the first two-wheeler to cross 1 million sales mark in just 5 months of this fiscal (FY'2015-16).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+