ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், தங்களின் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.
சமீபகாலமாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் அறிமுகம் ஆகி வருகிறன்றது. இந்த புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கிடைக்கும் இடங்கள்;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிளை, ஆரம்பகட்டத்தில் 21 இடங்களில் விற்கபட உள்ளது.
இந்த ஹார்னெட் 160ஆர், முன்னதாக ஹோண்டா ரெவ் ஃபெஸ்ட்-டில் காட்சிபடுத்தபட்டது. இந்த ஹார்னெட் 160ஆர், புது டெல்லி, அலிபாக், அஹ்மதாபாத், பஷீர்ஹட் (கொல்கத்தா), பெங்களூரூ, பொய்ஸார், சென்னை, கொச்சி, டெஹ்ராடூன் கோவா, ஹைதராபாத் மற்றும் இந்தோர் உள்ளிட்ட 21 நகரங்களில் விற்கபட உள்ளது.

இஞ்ஜின்;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக், 162.71 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின் 15.6 பிஹெச்பி-யையும், 14.76 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக்கின் இஞ்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக், முழுவதும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ருமெண்ட் கான்சோல், ஹை-மவுண்டட் ஹேண்டல் பார் கொண்டுள்ளது.
மேலும், இதில் ஸ்பிளிட் கிராப் ரெய்ல்ஸ், பிளாக் செண்டர் பீஸ், கிளியர் ஷார்ட் சைலன்ஸர், சில்வர் டெய்ல்பீஸ் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கபட்டுள்ளது.
இந்த ஹார்னெட் 160ஆர் பைக்கின் ப்ரண்ட் மற்றும் ரியரில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள், நியோ ஆரஞ்ஜ் மெட்டாலிக், பியர்ல் அமேஸிங் வைட், ஸ்போர்ட்ஸ் ரெட், பியர்ல் ஸைரன் ப்ளூ மற்றும் பியர்ல் நைட்ஸ்டார் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கின்றது.

விலை விவரம்;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் (ஸ்டாண்டர்ட்) - 79,900 ரூபாய்
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் (சிபிஎஸ்) - 84,400 ரூபாய்
இந்த விலை விவரங்கள் அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை என்பது குறிப்பிடதக்கது.

செய்திகள் உடனுக்குடன்…
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க ...


Click it and Unblock the Notifications








