ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் பைக் அறிமுகம் - முழு விபரம்!

By Saravana

நாட்டின் முக்கிய நகரங்களில் ஹோண்டா ஏற்பாடு செய்திருக்கும் ஹோண்டா ரெவ்ஃபெஸ்ட் விழாவில், பல புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டுக்கு அறிமுகம் செய்து சரவெடி கொளுத்தி வருகிறது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

இந்த நிகழ்ச்சியில், ஹோண்டா சிபி டிரிக்கருக்கு மாற்றாக வர இருக்கும் புதிய ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விற்பனையில் பொளந்து கட்டி வரும் நிலையில், இப்போது அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் இந்த புதிய மாடலையும் விரைவில் சேர்க்க இருக்கிறது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

கட்டுறுதியும், கம்பீரமும் மிக்க பைக் மாடலாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. ஹெட்லைட் மிக கூர்மையாகயும், பெட்ரோல் டேங்க் முன்னோக்கி சீறும் விதத்திலும் கம்பீரமாக இருக்கிறது. யூனிகார்ன் பைக்கைவிட சற்று பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

 யூனிகார்ன் எஞ்சின்

யூனிகார்ன் எஞ்சின்

புதிய யூனிகார்ன் 160 பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த புதிய பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய பைக்கில் 160சிசி ஒற்றை சிலிண்டர் கொண்ட ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

அதிகபட்ச சக்தி

அதிகபட்ச சக்தி

இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 14.5 எச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் யூனிகார்ன் 160 பைக்கைவிட சற்று கூடுதல் செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

எல்சிடி டிஜிட்டல் க்ளஸ்ட்டர், டிஸ்க் பிரேக் சிஸ்டத்துடன் இணைந்த ஹோண்டாவின் காம்பி பிரேக் தொழில்நுட்பம், எல்இடி டெயில் லைட், அகலமான டயர்கள் ஆகியவை இதன் முக்கிய சிறப்புகளாக இருக்கின்றன.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கைவிட ரூ.5,000 கூடுதல் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.90,000 விலை கொண்டதாக இருக்கும் என்பது கணிப்பு.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 4, 2015, 14:22 [IST]
English summary
Honda CB Hornet 160 R motorcycle has been unveiled during the Honda RevFest, that is happening across the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+