விசேஷ தொழில்நுட்பத்துடன் புதிய ஹோண்டா ஷைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

இந்தியர்களிடையே பிரபலமான ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஷைன் எஸ்பி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த பைக் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சிறப்பான பவர் வெளிப்படுத்தும் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பம்

ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பம்

ஸ்மார்ட் பவர் என்ற பதத்தை குறிக்கும் விதத்தில் ஷைன் பைக்கில் எஸ்பி என்ற எழுத்துக்களை சேர்த்திருக்கின்றனர். ஹீரோ ஐ-ஸ்மார்ட் ஸ்பிளென்டர் பைக் போலவே இந்த பைக்கில் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் சேர்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் சிக்னல்களில் நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்துவிடும். க்ளட்ச் லிவரை அழுத்தும்போது எஞ்சின் மீண்டும் உயிர்பெற்றுவிடும்.

மைலேஜ்

மைலேஜ்

ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டிருப்பதால், அதிக மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனம் தெரிவிக்கும் தகவலின்படி, லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஹோண்டா ஷைன் எஸ்பி மாடலில் இருக்கும் 124.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10.5 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி, முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் இரட்டை காயில் ஸ்பிரிங் கொண்ட சஸ்பென்ஷன், ட்யூப்லெஸ் டயர்கள் போன்றவற்றை குறிப்பிட்டு கூறலாம்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு, நீலம், சாம்பல், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி மாடல் விலை விபரம்

டிரம் பிரேக் மாடல்: ரூ.59,900

டிஸ்க் பிரேக் மாடல்: ரூ.62,400

சிபிஎஸ் பிரேக் மாடல்: ரூ.64,400

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

 

English summary
Honda Motorcycles launches the CB Shine SP in India for Rs. 59,000/- ex-showroom (Delhi). The Honda SP Shine is a commuter segment motorcycle and 'SP' stands for Smart Power. The motorcycle will be available in three variants.
Story first published: Thursday, November 19, 2015, 15:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark