ஹோண்டா ட்விஸ்ட்டருக்கு பைக்கிற்கு மாற்றாக வருகிறது லிவோ!
ஹோண்டா ட்விஸ்ட்டருக்கு மாற்றாக லிவோ என்ற புதிய பைக் மாடலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக ஹோண்டா ட்விஸ்ட்டர் பைக்கின் விற்பனை கணிசமாக சரிந்து வருவதையடுத்து, புதிய மாடலை அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.

இந்த புதிய பைக் மாடலில் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் டிசைன் அம்சங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய எஞ்சினும் பொருத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, புதிய சிபிஆர் 150ஆர், 250ஆர், 650எஃப் போந்ற மாடல்களையும், புதிய மின்சார ஸ்கூட்டர் மற்றும் பெட்ரோலில் இயங்கும் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மாடல்களையும் அறிமுகம் செய்ய ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








